பக்கம் எண் :

210தொல்காப்பியம் - உரைவளம்

“தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ
மணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே” 
  

(கலி-52)

“ஈர்ந்த ணாடைய யெல்லி மாலையை”

எனவரும்3.

“முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டலி
னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”
  

(குறுந்-167)
  

இது  குறுந்தொகை.  இது  பார்ப்பனரையும்4  பார்ப்பனியையுந தலைவராகக் கூறியது. கடிமனைச் சென்ற
செவிலி கூற்று. வாயினேர் வித்தலு மாம்.
  

“வருது மென்ற நாளும் பொய்த்தன
வரியே ருண்க ணீரு நில்லா
தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வான்முகை யவிழ்ந்த கோதை
பெய்வனப் பிழந்த கதுப்பு முள்ளா
ரருள்கண் மாறலோ மாறுக வந்தி
லறனஞ் சலரே யாயிழை நமரெனச்
சிறிய சொல்லிப் பெரிய புலம் பினும்
  


3. தாமரைக்கண்ணியும்  தண்  சாந்தும்  ஈர்ந்தண்   ஆடையுங்   கண்டு  இதில்  கூறப்படும்  தலைவன்
அந்தணன் எனக்கொண்டார் போலும். இப்பாடலில் தரவில் கல்லுயர் நனத்சாரற் கலந்தியலும் நாட, என
விளிவந்துள்ளமையின்  சாரல்  நாடன்  என்பதே தலைமகள் பெயராதலும் அப்பெயராதலும் அப்பெயர்
அந்தணனைக் குறியாது ஆதலினாலும் இவர் கூற்று ஆராய வேண்டுவதாம்.
  

4. முளிதயிர்  கொண்டு  சுட்டதீம் புளிப்பாகர் அந்தணர்க்கேயுரிய சிறப்புணவு எனக்கொண்டதால் இது
பார்ப்பனிக்குரியதாகக் கூறினார்.