பனிபடு நறுந்தார் குழைய நம் மொடு துனிதீர் முயக்கம் பெற்றோள் போல வுவக்கு நள் வாழிய நெஞ்சே விசும்பி னெறெழுத்து முழங்கினு மாறெழுந்து சிலைக்குங் கடாஅ யானை கொட்கும் பாசறைப் போர்வேட் டெழுந்த மள்ளர் கையதைக் கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி மானடி மருங்கிற் பெயர்த்த குருதி வான மீனின் வயின்வயி னிமைப்ப வமரகத் தட்ட செல்வந் தமர்விரைந் துரைப்பக் கேட்டு ஞான்றே.” |
(அகம்-144) |
மீண்டவன் நெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது. |
இம் மணிமிடைபவளத்து வேந்தன் தலைவனாயினவாறும் தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்கசெல்வமாகக் கருதுதற் குரியாள் அரசவருணத்திற் றலைவியே என்பதூஉம் உணர்க. |
“பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகை கொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ.” |
(கலி-31) |
இதனுள் வேந்தன் தலைவனாயினவாறு. பகைகொண்ட தலைமையின் அழகை நுகர விருமபினாள் என்றலிற் றலைவியும் அவ்வருணத்தாளாயவாறும் உணர்க “உலகுகிளர்ந்தன்ன” என்னும் அகப்பாட்டுள் வாணிகன் தலைவனாகவுங் கொள்ளக் கிடத்தலிற் றலைவியும் அவ்வருணத் தலைவியா மென்றுணர்க. |
“தடமருப் பெருமை மடநடைக் குழவி தூண்டொறும் யாத்த காண்டகு நல்லிற் கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை சிறுதாட் செறித்த மெல்விரல் சேப்ப வாழை யீர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண் டமர்த்த கண்ண டகைப்பெறப் பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்விய ரந்துகிற் றலையிற றுடையின னப்புலந் |