ஓதல் பகையே தூது இவை பிரிவெ சூ.27215

இனி, பிறரேவல்   புரியும்   ஏவன்  மரபினரும் அகத்துறைத் தலைவராதற்குரிய ரென்பதற்குச் செய்யுள்:
  

“இகல்வேந்தன்   சேனை   இறுத்த  வாய்போல”  (கலி-108)  என்பதில்  “அளைமாறிப்  பெயர்தருவா
யறிதியோ? என்றானுக்கு”
  

புனத்துளான் எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ?
  

இனத்துளான் என்னைக்குக் கலத்தொடு செல்வதோ?
  

தினைத்தாளுன் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ?
  

எனத்  தலைவி  கூறுவதால்,  இது  பிறர் ஏவல் புரிவோர் அகத்துறையிற் காதற்றலைமக்க ளாதற்குரிமை
கூறுதலுணர்க.
  

சிவலிங்கனார்
  

இளம்பூரணர்   உரையும்  நச்சினார்க்கினியரின்  வலிந்த  உரையும்  பொருந்தா.  பாரதியார்  உரையே
சாலும்.
  

27.   

ஓதல் பகையே தூது இவை பிரிவே (27)
  

ஆ. மொ. இல.
  

Having higher education fighting the
enemy and serving as an ambassador
are the causes for separation (from wife)
  

பி.இ.நூ.
  

இறை 35, முத்து கற்.3.
  

ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்று
ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே.
  

நம்பி. 62
  

பரத்தையிற் பிரிதல் ஓதற்குப் படர்தல்
அருட்டகு காவலொடு தூதிற்கு அகறல்
உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தல் என்று
உரைபெறு கற்பிற் பிரிவுஅறு வகைத்தே
  

இல.வி.அ.58  - -
  

மாறன் அகப்பொருள் 98