“அரம்போ ழல்வளை தோணிலை நெகிழ நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி இரங்கா முன்ன அரும்புமுதி ரீங்கை ஆலி யின்ன வால்வீ தாஅய் வைவா லோதி மையணல் ஏய்ப்பத் தாதுறு குவளைப்போதுபிணி யவிழப் படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க் கடாஅம் மாறிய யானை போலப் பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப் பனியடூஉ நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி முரணில் காலைக் கைதொழு மரபிற் கடவுள் சான்ற செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற ஒன்பது குடைய நண்பக லொழித்த பீடில் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே.” |