மேல்வரும் துறவறம் நிகழ்த்துதற்காக அவற்றைக் கூறும் நூல்களையும் கற்று அவற்றின் பின்னர்த் தத்துவங்களையுமுணர்ந்து மெய்யுணர்தல் அந்தணர் முதலிய மூவர்க்கும் வேண்டுதலின் ஓதற்பிரிவு அந்தணர் முதலியோர்க்கே சிறந்ததென்றார். |
“பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ” |
(கலி-15) |
என்பதும் அது; மையற்ற படிவம் அந்தணர் முதலியோர் கண்ணதாகலின். “விருந்தின் மன்னர்” அகப்பாட்டில் (54) வேந்தன் பகைமையைத் தான் தணிவித்தமை கூறலின் அந்தணன் தூதிற் பிரிந்தமை பெற்றாம். “வயலைக்கொடியின் வாடிய மருங்குல்” என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூது சென்றவாறுணர்க. அரசன் தூதுசேறல் பாரதத்து வாசுதேவன் தூது சென்றவாற்றானுணர்க. |
அது |
“பட ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே.” |
(சிலப்-ஆய்ச்சியர் குரவை) |
என்பதனானுணர்க. வாணிகன் சென்ற தூது வந்துழிக் காண்க. |
பாரதியார்1 |
28. அவற்றுள்ஓத....................மேன |
கருத்து:- இது மேற்சூத்திரம் கூறும் பிரிவு மூன்றனுள் இரண்டற்குரியாரை உணர்த்துகிறது. |
பொருள்:- அவற்றுள் மேற்குறித்த மூன்றனுள்; ஒதலுந்தூதும் - ஓதற்பிரிவும் தூதுபற்றிய பிரிவும்; உயர்ந்தோர்மேன-பெரும் வினையும் பற்றிய திணை நிலைப் பெயர்க்குரியார் பலருள்ளும் அடியோர் வினைவலர் ஏவலர் போல் வாரல்லாத உயர்ந்தோர்க்கே உரியவாகும். |
1 இவர் உரையும் விளக்கமுமே சிறந்தன. |