பக்கம் எண் :

222தொல்காப்பியம் - உரைவளம்

குறிப்பு:-     அடியோர், வினைவலர், ஒருவருக்கு ஏவலர், ஏவன்   மரபினேனையோர், இந் நால்வரும்
பிறரேவலை  எதிர்  பார்த்து வாழ்பவராதலின் ஒதலும் தூதுமாகிய   உயர்ந்தோர் தொழிலேற்றற்கு உரிமை
கொள்ளார்.   அவரொழிந்த   நானிலத்    தமிழ்க்குடிமேன்மக்களே    அவற்றை  மேற்  கொள்ளுதற்குத்
தகுதியுடையராதலின் இவை அவ்வுயர்ந்தோர் மேலன என்று விளக்கப்பட்டன.
  

உயர்ந்தோரல்லாத  அடியார் முதலிய நால்வர்க்கு அகத்திணை யொழுக்கங்கள்  கடியப்படாவென மேல்
இரண்டு சூத்திரங்களிற் கூறிய இந்நூலார், அவ்வொழுக்கங்களுள் ஒன்றான    பிரிவிற்குரிய நிமித்தங்களுள்
ஓதல்  தூதாகிய  இரண்டிற்கும்  அவர் உரியராகாமையான் அவை பற்றிய  பிரிவிற்கு   அவர் உரியராகார்
என்பதை  இச்சூத்திரத்தால்  தெளிய  வைத்தார்.   மேற்சூத்திரத்திற் கூறிய  பிரிவினிமித்தம்   மூன்றனுள்
இரண்டே     உயர்ந்தோர்க்குரியன   என   இச்சூத்திரம்   கூறுதலால்,   எஞ்சிய   பகைவயிற்   பிரிவு
உயர்ந்தோர்க்குப்     போலவே   பிறர்க்கும்   உண்டென்பது   பெறவைத்தார்.   உயர்ந்தோரின்  ஏவல்
மேற்கொண்டொழுகுவாரும்,    அவரேவியவழிப்  பகைவரொடு பொருதற்குரிய ராதலின், பகைவயிற் பிரிவு
அவர்க்கு விலக்கப்படாமையுணர்க. அதுவே போல், பொருட் பிரிவும் எல்லோர்க்கும் பொதுவாகும்.
  

இனி,   இச்சூத்திரத்திற்கு நால்வகை வருணத்துள் அந்தணர்  அரசராகிய முதல் இருவகையினரே ஒதல்
தூது  மேற் கொள்ளற்குரியர் எனப்பிறர் கூறுமுரை பொருந்தாது நான்கு   வருணம் ஆரியர் அறநூல்களே
கூறும்  வகைகளாதலானும்,  பண்டைத் தமிழருள் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுகளுடன் வேறுபடும்
அந்நால்வகை வருணங்கள்  உலகியலில்  வழங்காமையானும்,  தொல்காப்பியர்  தாம் தமிழ் மரபுகளையே
கூறுவதாக வற்புறுத்தலானும், அகத்திணையியலின் தமிழ்நாட்டு நானில மக்கள் யாண்டும் கூறப்படாமையானும்,
அவருரை   அமைவுடையதன்று.   அது   சூத்திரக்  கருத்தன்மை, இதில்  உயர்ந்தோரென்பதற்கு முதலிரு
வருணத்தாரென்று  உரையாசிரியரும்,  முதல்  மூன்று  வருணத்தார்  என்று  நச்சினார்க்கினியரும் தம்முள்
மாறுபடக்   கூறுதலானும்   தெளியப்படும்.   அன்றியும்,   வணிகரை   விலக்கி   அந்தணரும் அரசருமே
இவ்விருவகைப்   பிரிவிற்குரியர்  என்று   தாம்   கூறுதற்குக்  காரணம்  ‘ஒழுக்கத்தானும்   குணத்தானும்
செல்வத்தானும் -