பக்கம் எண் :

தானே சேறலும் தன்னொடு சிவணி சூ.29223

ஏனையரினும்   உயர்ந்தோ ரென்றார்’ என்பர் இளம்பூரணர். ஒழுக்கம் குணம்   செல்வங்களால் வணிகர்
மற்றைய   இருபிறப்பாளர்க்குக்   குறைந்தவர்   என்பதுண்மையன்றாகலானும்,      செல்வத்தால்  வணிகர்
ஏனையரினும்  தாமே  உணர்வுடையராதலானும்,   வணிகரும்  நானிலத்தமிழரும்   ஒதற்குரியரேயாதலானும்
இதுவும் சூத்திரக் கருத்தாகாமை பெறப்படும்.
  

29.   

தானே சேறலும் தன்னொடு சிவணி1 ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே(29)
 

ஆ.மொ.இல.
  

going himself or others (associated) with him going
on his behalf for fighting the enemy is a privilage
of the king.
  

நம்பி 77, இல அக 445
  

உதவி அந்தணர் ஒழிந்தோர்க்குரித்தே.
 

இளம்பூரணர்
  

29. தானே சேறலும்........................மேற்றே
  

இது, பகைவயிற் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  தானே  சேறலும்  -  தானே சேறலும், தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் - அவனொடு கூடி
ஒழிந்தோர்: சேறலும், வேந்தன் மேற்று - வேந்தன் கண்ணது.
  

பகையென்றது     மேனின்ற அதிகாரத்தான்  உய்த்துணர்ந்து கொள்ளக்    கிடந்தது.  ‘தானே’ என்பதன்
ஏகாரம் பிரிநிலை; படையை யொழிய என்றவாறு.  போரைக் குறித்துப்பிரித்ததும் அரசர்க்கு    உரித்தென்று
கொள்க. இதனுள் அரசன் தலை மகனாயுழிப் பகைதணிவினைப் பிரிவு எனவும், அவனொடு
  


1. சிவணிய-நச். பாடம்