பக்கம் எண் :

224தொல்காப்பியம் - உரைவளம்

சிவணி ஏனோர்1 தலைவராயுழி வேந்தற்குற்றுழிப் பிரிவு2 எனவும் இதனை இருவகையாகக் கொள்க.
  

27. நச்சினார்க்கினியர்
  

இது பகைவயிற் பிரிவு அரசர்க்கே உரிதென்கின்றது.
  

(இ-ள்)  தானே சேறலும் - தன் பகைக்குத் தானே செல்லுதலும்;  தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும்
-  அவனொடு  நட்புக்கொண்ட  ஒழிந்தோர்  அவற்குத்  துறையாகிச்      செல்லுதலுமாகிய  இருபகுதியும்;
வேந்தன் மேற்று - அரசன் கண்ணது என்றவாறு.
  

எனவே,  வாணிகர்க்கு உரித்தன்றாயிற்று3 தானேயென்று   ஒருமை கூறிய அதனானே முடியுடைவேந்தர்
தாமே   சேறலும்   ஏனோரெனப்  பன்மை  கூறிய  அதனானே      பெரும்பான்மையுங்  குறுநிலமன்னர்
அவர்க்காகச்  சேறலும்,  முடியுடை  வேந்தர்  அவர்க்காகச்    சிறுபான்மை   சேறலும், உணர்க. முடியுடை
வேந்தர்  உள்வழிக்  குறுநில  மன்னர்  தாமே செல்லாமையுணர்க இதனை    “வேந்தர்க்குற்றுழி” யென்ப
ஏனையார்4  அவ்வேந்தர்  இல்வழிக்  குறுநில  மன்னருந்  தாமே   சேறல்    “வேந்து  வினையியற்கை”
என்பதன்கட் கூறுப. இதனானே தன்பகை மேலும் பிறர்பகை மேலும் ஒருகாலத்திற் சேறலின் றென்றார்.
  

“கடும்புனல் கால்பட்டு” என்னும் பாலைக்கலியுள்,
  

“மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர்
தயங்கிய களிற்றின்மேற் றகைகான விடுவதோ.”  

(கலி-31)
    


1. ஏனோர் - குறுநில மன்னர், பிறவேந்தர்.
   

2. தான்  அரசனாயிருந்தாலும்  வேற்றுவேந்தர்  தலைவராயிருக்கும்  போர்க்கோ    அல்லது  குறுநில
மன்னர் பொரும் போர்க்கோ உதவச்செல்வது வேந்தர்க்கு உற்றுழி உதவுதலாகும்.
  

3. அந்தணர்க்கு  உரித்து  என்பது  இவர்  கருத்து.  தமிழக அந்தணர்  அந்தணராதலின் பொருந்துமா
என ஆய்க
  

4. பிறகால இலக்கண நூலார் இறையனார் களவியல் நூலார் முதலியோர் (இள.ந.சூ.35)