எனவும், |
“பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்”. |
(கலி-31) |
எனவும் மண்கோடலுந் திறைகோடலும் அரசர்க்கே உரித்தாகக் கூறியது. |
“நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே.” |
(கலி-31) |
எனச் சுரிதகத்துக் கூறியவாற்றா னுணர்க. |
“பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி யொருபெருங் காதலர் சென்றார் வருவது வாணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கா னீணகர் முன்றின்மே னின்று” |
இது வேந்தர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது. |
“கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட் டியானைப் போர் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்னநின் பிழையா நன்மொழி தேறிய விவட்கே.” |
(நற்றிணை 10) |
இது குறுநிலமன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது. |
“மலைமிசைக்குலைஇய” |
(அகம் 84) |
என்பது அது. |
இனி வேட்டைமேற் சேறலும் நாடுகாணச் சேறன் முதலியனவும் பாலையாகப் புலனெறி வழக்கஞ் செய்யாமை உணர்க. வேந்தனென்று ஒருமையாற் கூறினார். “மெய்ந்நிலை மயக்கினா அகுநவும்” என்னும் விதிபற்றி1 சிவணிய வென்பதனை வினையெச்ச மாக்கி நட்பாடல் வேண்டியென்றுமாம்2 |
1. “மெய்ந்நிலை மயக்கின் ஆஅகுந” (தொல் சொல். எச்ச-53) என்பதில் ஒருமைச்சொல் பன்மைப் பொருளில் வரும் என்பது கூறப்படுகிறது. அதற்கேற்ப தானே என ஒருமையிற் கூறினாலும் தாமே எனப் பன்மை கொள்ளல் வேண்டும். |
2. சிவணிய ஏனோர்-பெயரெச்சத்தொடராக உரை கூறினார். சிவணிய என்பதைச் செய்யிய என்னும் வினையெச்சமாகக் கொண்டு சிவண வேண்டி எனவும் பொருள் கொள்ளலாம் என்றார். |