மீளிவேற் றானையர் புகுதந்தார் நீளுயர் கூடல் நெடுங்கொடியெழவே” |
(பாலைக்கலி-31) |
2 “கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்திற் றவிர்குதல் யாவது மாற்றருந் தானை நோக்கி யாற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே” |
(ஐங்குறுநூறு 451) |
(II) வேந்தனொடு சிவணிய ஏனோர் சேறற்குச் செய்யுள்; |
1 “காய்சின வேந்தன் பாசறை நீடி நற்றோ யறியா வறனி லாளர் இந்நிலை களைய வருகுவர் கொல்லென ஆனா நெறிதரும் வாடையொடு நோனேன் தோழியென் தனிமை யானே” |
(அகம்-294) |
2 “கூதிர் நின்றன்றாற் பொழுதே; காதலர் நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை யறிந்தனர் கொல்லோ? தாமே யோங்குநடைக் காய்சின யானை கங்குற் குழ அஞ்சுவர விறுத்த தானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே” |
(அகம்-264) |
30. | மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையான் பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே. | (30) |
|
ஆ.மொ.இல. |
Separation for earning money and for setting things right in the region of forest and such others in the affaire of others who are emenent. |