முத்து. அக.48 |
ஏனைக் காவல் இறைவர்க்குரிய |
இளம்பூரணர் |
30. மேவிய சிறப்பின்...................பிரிவே |
இது, மேற்சொல்லப்பட்ட மூவகை நிமித்தமுமன்றி வருவன உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய - நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவரது பூசையும் விழவும் முதலாயினவும், முல்லை முதலா சொல்லிய - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்களும், முறையால் பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும். முறைமையில் தப்பிய வழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவு-செய்யப்பட்ட ஒள்ளிய பொருள் ஆக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம். |
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய என்பது நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்புடைய மக்களையல்லாத தேவரது படிமையவாகிய பொருள்கள் என்றவாறு. முல்லை முதலாச் சொல்லிய என்பது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்கள் என்றவாறு. முறையால் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் பிரிவே என்பது மேற்சொல்லப்பட்டன முறைமையில் தப்பிய வழிதப்பாது அறம் நிறுத்தற் பொருட்டும் பிரிவுளதாம் என்றவாறு. இழைத்த ஒண்பொருள் முடிய வேண்டியும் பிரிவு உளதாம் என்றவாறு. |
(இதன் பொழிப்பு, தேவரது பூசை முதலாயினவும் மக்களும் முறைமை தப்பியவழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும், பொருளாக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம் என்றவாறு) |
காவல், பொருட்பிரிவு எனப் பிற நூலகத்து ஓதப்பட்ட இரு வகைப்பிரிவு1 ஈண்டு ஓதப்பட்ட தென்று கொள்க2 ‘மேவிய’ |
1. இறை-களவியல் 35. |
2. இவ்வாறெழுதினாலும் இச்சூத்திரம் கொண்டே அந்நூல்கள் இருவகைப் பிரிவுகளைக் கூறினர் என்க. |