பக்கம் எண் :

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய சூ 30229

என்பது     “மாயோன்    மேய காடுறை யுலகமுஞ்,      சேயோன் மேய மை வரையுலகமும்” (அகம்-5)
என்பதனால்  நால்வகை  நிலத்தினும்  மேவிய     எனப்பொருளாயிற்று.  ‘சிறப்பினேனோர்’  என்றதனால்
நால்வகை  நிலத்தினும்  மேவிய  எனப்பொருளாயிற்று.     ‘சிறப்பினேறோர்’  என்றதனால் சிறப்புடையார்
மக்களும்  தேவருமாகலின், மக்களல்லாதாரே தேவர் என்று    பொருளாயிற்று, ‘படிமை’ என்பது ப்ரதிமா3
என்னும்  வடமொழித்திரிபு. அது தேவர்க்கு ஒப்புமையாக     நிலத்தின்கண் செய்து அமைத்த தேவர்மேல்
வந்தது. அவருடைய பொருளாவன பூசையும் விழாவும் முதலாயின.
  

  

‘முல்லை     முதலாச் சொல்லிய’  என்பது    “பிறந்தவழிக்கூறல்” (சொல்-114) என்னும் ஆகுபெயரான்
அந்நிலத்தின்  மக்களை  நோக்கிற்று.   ‘பிரிவு’  என்பதனை    பிழைத்தது  பிழையாதாகல்  வேண்டியும்
பிளவுளதாம்,  இழைத்த  வொண்பொருண்  முடியவும் பிரிவுளதாம்,     என இரண்டிடத்துங் கூட்டுக. ஆம்
என்பது எஞ்சி நின்றது.
  

  

தேவர் காரணமாகப் பிரியும் பிரிவுக்குச் செய்யுள்:
  

“அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
ஈர்ங்கா ழன்ன அரும்புமுதி ரீங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவா லோதி மையண லேய்ப்பத்
தாதுறு குவளைப் போதுபிணி யவிழப்

  


3. படிமை-உருவம்.    அதாவது    போலப்படிந்த   தன்மையுடைய உருவம். அதன்படி சொற்படி என
வருவனவற்றில்  படி என்பது  போலும்  என்பதை யுணர்த்துதல் காணலாம். இக்காலத்துப் படி (copy)
எடுத்தல் வழக்குண்மை காண்க. கண்ணுக்குப் புலப்படாத தேவர் உருவைக்கருத்துக்குப் புலப்பட்டவாறு
அமைக்கப்படுவதே  கடவுள்  படிவம்.  படிவம்  என்னும்  தூய  தமிழ்ச் சொல்லே ஆரிய மொழியில்
பிரிதிமா எனக்குறிக்கப்பட்டது.