பக்கம் எண் :

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய சூ 30231

பிழைத்தது     - முன்னர் ‘ஆள்பவர்    கலக்குறுத்த    அலைபெற்று    நெறிமுறைமை தப்பிய அந்நாடு;
முறையாற்   பிழையாதாகல்      வேண்டியும்,   பிரிவே   -   தனது  பழைய  நாடுகளை  ஆளும்  நெறி
முறைமையினாலே  தப்பாமல்   ஆக்கம்  பெறக்  காத்தலை விரும்பிப் பிரிதலும் பிரிவே; ஏனோர் படிமைய
இழைத்த  ஒண்பொருள்    முடியவும்    பிரிவே-முற்கூறிய  அந்தணர்  அரசரை  ஒழிந்த வணிகர் தமக்கு
விரதங்களுடையவாக   வேதநூலிற்  கூறிய    ஒள்ளிய  பொருள்  தேடி   முடியும்படி  பிரிதலும்  பிரிவே
என்றவாறு.
  

பிரிவை     இரண்டற்குங்    கூட்டுக.  சிறப்பிற்  பிரிதலும்     எனச்சேர்க்க.  சொல்லிய  வென்பதும்
பிழைத்ததென்பதுந்  தொழிற்பெயர்1  முறையாற் காக்கவென முடிக்க.    விரதமாவன ‘கொள்வதூஉம் மிகை
கொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசன்2 முதலியன
  

உதாரணம்:
  

“ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியு
மீனேற்றுக் கொடியோன்போன் மிநிறார்க்குங் காஞ்சியு
மேனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலு
மானேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும்
ஆங்கத் 

  

தீதுநீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப்
போதவிழ் மரத்தோடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றா ளிளவேனின் மேதக;

  

பலவரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத்
தொல்கவின் றொருந்தவென் றடமென்றோ ளுள்ளுவா
ரொல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்;  


1. வினையாலணையும்    பெயர்.   சொல்லிய   -    சொல்லப்பட்டவாகிய    நால்வகை   நிலங்கள்.
பிழைத்தது-பிழைத்ததாகிய நாடு.
  

2. பட்டினப்பாலை (210-211)