வுந், “தோற்றஞ்சா றொகுபொருள்” என்பதற்குத் தோற்றம் அமைந்த திரண்ட பொருளாவன அந்நாடுகாத்துப் பெற்ற அறம் பொருளின்பம் எனவும், “பகையறு பயவினை” என்பதற்குப் பகையறுதற்குக் காரணமாகிய நாடாகிய பயனைத்தரும் வினையெனவும், “வேட்ட பொருள்” என்பதற்கு அறம் பொருளின்பமெனவும் பொருளுரைத்துக் கொள்க. |
பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து பொருள் கூறுக. |
இனிக், |
“கேள்கே டூன்றங் கிளைஞ ராரவுங் கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து”. |
(அகம்-93) |
என வாணிகர் பொருள்வயிற் பிரிந்தவா றுணர்க. |
“நாட்டோ ராக்கம் வேண்டியு மொட்டிய நின்றோ ளணிபெற வரற்கு மன்றோ தோழியவர் சென்ற திறமே” |
(நற்றிணை-286) |
என்பதனுள் அணியென்றது பூணினை. |
பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து கொள்க. |
பாரதியார் |
30. மேவிய........................பிரிவே |
கருத்து:- இது, மேற்கூறிய ஓதல் பகைதூது ஒழிய, காவல் பொருளெனப் பிறவசைப் பிரிவுகளையும், அப்பிரிவுகளுக்குரியாரையுங் கூறுகின்றது. |
பொருள்:- மேவிய சிறப்பின் ஏனோர் - வேந்தனொடு பொருந்திய சிறப்புடைய வேந்தன் கிளைஞர் ஏனாதியர் முதலியோர்; படிமைய முல்லை முதலாச் சொல்லிய - நிலவகுப்புக்களான முல்லை முதல் நெய்தலிறுதியாக (மேலே ஐந்தாஞ் சூத்திரத்திற்) சொல்லப்பட்ட நால்வகை உலகங்கள்; முறையாற் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் - முறை வழுவித் தப்பியது முறையாற்றப்பாதாதலை விரும்பியும் இழைத்த ஒண்பொருண்முடியவும் - (யாவரும்) வினைசெய்து உயர்ந்த பொருளை ஆக்கவும்; பிரிவே - பிரிதல்நிகழும். |