பக்கம் எண் :

234தொல்காப்பியம் - உரைவளம்

குறிப்பு:-  ஈற்றேகாரம்  அசை,  படிமைய  என்பதில் படி நாட்டை அல்லது நிலத்தைக் குறிக்கும். இனி,
படிமைய என்பதற்குப் பகைமையுடைய அல்லது கீழ்ப்படிந்த எனப்பொருள் கோடலும் பொருந்தும்.
  

பாலைத்     திணையாகிய பிரிவு அறுவகைப்படும். ஓதல்  தூது, பகை, காவல்,  பொருள் பரத்தை என.
அவற்றுள்,  பரத்தையிற்  பிரிவு  கைகோளிரண்டில்   கற்பளவிலிடம் பெற்றுக், களவுக்    கமையாமையின்.
அப்பிரிவு  பின்னர்  அத்தொடர்புடன்  கூறப்படும்.   ஆதலின்  அதை  நீக்கி,  மற்ற    ஐந்தும் இங்குக்
கைகோளிரண்டிற்கும் பொதுவாகக் கூறப்பட்டன.  அவ்வறு வகைப் பிரிவுள், ஓதல், தூது,   காவல் மூன்றும்
உயர்ந்தோர்க்கே யுரியன; பகை பொருட் பிரிவுகள் யாவர்க்கும் ஒப்பவுரியன.
  

ஓதல் பகை தூது போலவே, பொருள் பற்றியும் காவல் பற்றியும் பிரிவு   நிகழ்தல்   உலகியலும் மரபும்
ஆதலின்,  அவற்றுள்  முதல்  மூன்றும் முன் கூறியதால் காவற்பிரிவும்  பொருட்பிரிவும் இச்சூத்திரத்திற்
கூறப்பெற்றன.  வேந்தனொடு  சிவணிய  ஏனோர், தம்பொருட்டு ஓதல்    நுதலியும், வேந்தன் பொருட்டுத்
தூது  பகைதெறல்  நுதலியும்  பிரிவது  போலவே, நாடுகாவல் பற்றியும்    பொருள் முடிக்கவும் பிரிவுமேற்
கொள்ளுவது  மரபு  என்பது  இச்சூத்திரத்தில்  விளக்கப்பட்டது.   வேந்தனுக்குப்    பகைதெறத்  தானே
சேறலியல்  பாயினும்,  பிறநாடு  காவல் பற்றியும் பொருள்பற்றியும்     பிரிதல் சிறந்ததன்றாகும். அதனால்,
மன்னற்குத்தானே  பகைவயிற்  சேறலுண்டென  மேற்சூத்திரத்திற்    கூறிய   தொல்காப்பியர் அவனுக்குக்
காவல்  பொருட்பிரிவுகள்  கூறாது,  அவனொடு  மேவிய   சிறப்பினையுடைய   ஏனைய  உயர்ந்தோர்க்கு
இப்பிரிவுகளை இதில் விதந்து கூறினார்.
  

(I) உயர்ந்தோர் காவற்பொருட்டுப் பிரிதற்குப் பாட்டு:
  

1. “பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத்
தொல்கவின் றொலைந்தவென் றாடமென்றோ ளுள்ளுவார்
ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
வெல்புக ழலகேத்த விருந்துநாட் டுறைபவர்: