பக்கம் எண் :

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே சூ.31235

2. திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை
வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த
மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்.
  

3. அறல்சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித்
திறல்சான்ற பெருவனப் பிழைப்பதை யருளுவார்
ஊறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
யாறின்றிப் பொருள்வெஃகி யகன்நாட் டுறைபவர்”
  

  (கலி-26)
 

II. அவர் பொருள் வயிற்பிரிதற்குதாரணம்:
  

“அஞ்சுரக் கவலை நீந்தி என்றும்
இல்லோரக்கு இல்லென் றியைவது காத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே, காதலர் காதல்;
இருளே காதலர் என்றி, நீயே.” 
  

(அகம்-53)
 

சீத்தலைச் சாத்தனார்.
  

“வெயில்வீற் றிருந்த வெம்மலை யருஞ்சுரம்
ஏகுவ ரென்ப தாமே தம்வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லா தோரே”   

  (நற்றிணை 84)
 

சிவலிங்கனார்
  

இச்சூத்திரம்   காவற்பிரியும்   பொருட்பிரிவும்   உண்டு   என்கின்றதேயன்றியார்க்கு   உரிய   என்று
கூறவில்லை. அது அடுத்த சூத்திரத்துக் கூறப்படும்.
  

31.  

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே (31)
 

ஆ.மொ.இல.
  

The order of the exalted belongs to all the people of
four regions.