இதனுள் ‘நடுநின்’ றென்றதனான் இருபெரு வேந்தரையுஞ்சந்து செய்வித்தற்கு யான் நடுவே நிற்பலென்று, “எஞ் செய் பொருள் முற்றுமள’ வென்றதனான் அது முடிந்த பின்னர் யாம்பெருதற்குரியவாய் அவர் செய்யும் பூசனையாகிய பொருண் முடியுமளவுமென்றும், அந்தணன் பொருள்வயிற் பிரியக் கருதிக் கூறிய கூற்றினை அவன் தலைவி கூறியவாறுணர்க இதனைக் ‘கடிமனைகாத்’ தென்றதனை இல்லறமாகவும், ஓம்ப, வென்றதனைச் செந்தீயோம்பவென்றுங் கொள்க. |