14 | தொல்காப்பியம் - உரைவளம் |
எனவரும். ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற்4 புறத்திணை யேழென்ற தென்னையெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காவது இரண்டாயவாறுபோல, அகத்திணையேழற்கும் புறத்திணை யேழென்றலே பொருத்த முடைத்தாயிற்று. எனவே அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந் நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின், ஒன்றொன்றற்கு இன்றியமையாவாறாயிற்று. கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின், வேறு திணையாகாது. | எண்வகை மணத்தினும் எதிர் சென்று கூறுவதாக லானுங், காமஞ் சாலா விளமைப் பருவம் அதன் கண்ணதாக லானுங் கைக்கிளையை முற்கூறினார். | என்ப வென்றது அகத்தியனாரை5 இக் குறியீடுகளும் அகத்தியனாரிட்டவென் றுணர்க. | சோம சுந்தர பாரதியார் | எழுத்துஞ் சொல்லும் செய்யுளுக்கு இன்றியமையாத உறுப்புகளாதலின், அவற்றை முறையே முன்னிரண்டு பகுதிகளாக வகுத்துக் கூறின தொல்காப்பியர் புலவர்க்குரிய பொருட் பகுதியை மூன்றாம் படலமாக வகுத்தார். மக்கள் கருத்துகளை விளங்க வெளிப்படுத்துங் கருவியனைத்தும் செய்யுளெனப்படும். செவ்விதாய உளப்பாடு, அதாவது உளத்துறுங் கருத்தைக் கேட்போருளத்துறக் கூறுதற்குரிய சொற்றொடர்களெல்லாம் செய்யுளாகும். பாட்டே செய்யுளென்பது பிற்காலப் பிழை வழக்கு. உரை, பாட்டு, நூல், பிசி, குறிப்புமொழி, மறைமொழி, பழமொழி எனப் பலவகையானும் பல்வேறுருவிற்றோன்றி நின்று பொருள் பயப்பன யாவும் செய்யுளேயாம். செய்யுளெல்லாம் பொருள் பற்றியவே யாகலானும், பொருளொன்றே மக்கள் |
4. பன்னிரண்டாவன: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை. 5. முற்காலத்து இலக்கண நூலாளார் என்றலே பொருத்தம்; அகத்தியர்க்கும் முந்து நூல்கள் உண்டு. |
|
|