2. “நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய நின்றோள் அணிபெற வரற்கும் அன்றோ தோழி யவர்சென்ற திறமே” |
(நற்றிணை-286) |
3. “ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக வெண்ணுதி அவ்வினைக் சும்மா வரிவையும் வருமோ, வெம்மை யுய்த்தியோ வுரைத்திசை னெஞ்சே” |
(குறுந்தொகை.63)
|
(II) தூதுப்பிரிவுக்குச் செய்யுள் : |
(1) “மிகைதணித தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த பகைதணித் தற்குப் படர்தலுற்றார் நமா, பல்பிறவித தொகை தணித்தற்கென்னை யாண்டுகொண்டோன் றில்லைச் (சூழ்பொழில்வாய் முகைதணித்தற் கரிதாம் புரிதாழ்தரு மொய்குழலே” |
-திருச்சிற்றம்பலக்கோவையார். |
(2) “இகலுமிரு வேந்தர்க் கிடையமரின் தீமை அகலப் பொருத்த அகன்றார் - நகையாமே காமப் பகைதணியக் கற்பின் மனைபொருந்தி ஏம மெமக்கீயா தின்று” |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் பொருள் வயிற் பிரிவானது அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வர்க்கும் உரியது என்கின்றது. |
(இ-ள்) மேல் ஓர் முறைமை - மேற் சூத்திரத்துச் சொல்லப்பட்ட பிரிவுகளுள் பொருள் வயிற் பிரிவு என்பது ஒன்றும், நால்வர்க்கும் உரித்து அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வர்க்கும் உரியதாகும் என்றவாறு. |