இதனானே, |
“பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயின் |
(புறநா-35) |
எனவும், |
“ஞாலத்துக், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் குடிபுறந் தகுநர் பார மோம்பி” |
(பதிற்றுப்-13) |
எனவுஞ் சான்றோர் கூறியவாறுணர்க. |
உதாரணம் :- |
“வேந்தன் குறைமொழித்து வேண்டத் தலைப்பிரிந்தார் தாந்தங் குறிப்பின ரல்லரா லேந்திழாய் கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ தண்பனி நாளே தளித்து” |
எனவரும். (30) |
பாரதியார்1 |
32. மன்னர் பாங்கிற்...........................ஒத்தி னான. |
கருத்து:- இது மன்னரைப் பொருந்திச் சிறந்த வேந்தன் கிளைஞர் ஏனாதியர் முதலிய மேலோர்க்குமேல் 27, 28 ஆம் சூத்திரங்களில் கூறிய பகை, காவல், பொருள் பற்றிய பிரிவு ஒழியப் பிற பிரிவுகள் கூறும் ஒழிபுச் சூத்திரமாகும். |
பொருள்:- உயர்ந்தோர்க்குரிய - அடியோர் முதலிய கீழோரல்லாத சிறப்புடையோர் செய்தற்குப் பொருந்திய; ஓத்தின் ஆன - கல்வியான் ஆம் பிரிவுவகை அனைத்துக்கும்; மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப - மன்னர் சார்பில் அவரொடு சிவணிப் பின்னிற்போர் உரியராவர். |
குறிப்பு:- பிரிவைந்தனுள் பொருளும் போரும் எல்லார்க்கும் பொது. ஓதலும் தூதும் அடியார் முதலிய கீழோரை விலக்கி மற்ற நானில மேன் மக்களுக்குரிய என்பதை மேல் 25, 26 ஆம் சூத்திரங்கள் கூறின. நாடு காவற்பிரிவு மன்னரொடு சேர்ந்து |
1. இவர் கூறும் உரை ஆராயத்தக்கது. இதையும் அடுத்த சூத்திரத்தையும் ஒரு சூத்திரமாகக் கூறுவர். |