பக்கம் எண் :

உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தின் ஆன சூ 33245

இது வணிகர்க்கு உரியதொரு பிரிவு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)    உயர்ந்தோர்க்கு    -    மேல்  அதிகரிக்கப்பட்ட   பின்னோராகிய   இருவகையோரிலும்
உயர்ந்தோராகிய வணிகர்க்கு ஓத்தினான உரிய - ஓதுதல் நிமித்தமாகப் பிரிதலும் உரித்து.
  

ஓத்துப்  பலவாதலின்  ‘உரிய’  என்றார். ஈண்டு ஓத்து என்பது வேதம்; அது நால்வகை வருணத்தினும்
மூவர்க்கு உரித்தென்பது இத்துணையெனக் கூறப்பட்டது.
  

நச்சினார்க்கினியம்
  

33. உயர்ந்தோர்........................ஆன
  

இது நான்கு வருணத்தோர்க்கும் எய்தாத தெய்வித்தது
  

(இ-ள்)   ஓத்தின்   ஆன-வேதத்தினாற்  பிறந்த  வடநூல்களும்  தமிழ்  நூல்களும்;  உயர்ந்தோர்க்கு
உரிய-அந்தணர் அரசர் வணிகர்க்கும், உயர்ந்தவேளாளர்க்கும் உரிய என்றவாறு-
  

அவை  சமயநூல்களும் ஒன்றற்கொன்று மாறுபாடு கூறுதருக்க   நூல்களும் தருமநூல்களும் சோதிடமும்
வியாகரணம்  முதலியனவும்  அகத்தியம்  முதலாகத்    தோன்றிய  தமிழ் நூல்களுமாம். வேதந்தோன்றிய
பின்னர் அது கூறிய பொருள்களை இவையும் ஆராய்தலின் ஓத்தென்பது வேதத்தையே யாதலின்.
  

சிவலிங்கனார்
  

இச்சூத்திரம் அறவொழுக்கங்கள் உயர்ந்தோர்க்கு உரியது என்கின்றது.
  

(இ-ள்)  நூல்களிற் சொல்லப்பட்ட ஒழுக்கங்கள் உயர்ந்தோர்க்கு உரியனவாம். மற்றையோர்க்கு இல்லை
என்றவாறு  (உயர்ந்தோராவார் ‘ஓதலும்தூதும் உயர்ந்தோர் மேன 28) என்பதிற்கூறப்பட்டவர்.    ஓத்து-நூல்.
பாடப்படுவது  பாட்டு  என்பது  போல் ஓதப்படுவது ஓத்து ஆயிற்று. ‘ஆன’ என்றது   அதன் கூறப்படும்
ஒழுக்கங்களை.