பக்கம் எண் :

246தொல்காப்பியம் - உரைவளம்

அடியோரும்   வினைவலரும்   ஏனோரும்   தமக்கென   ஒரு   நெறியுடையரன்றி   உயர்ந்தோர்வழி
யொழுகுவர் ஆதலின் தம் விருப்பப்படி ஒழுகல் இயலாது இச்சூத்திரம் பிரிவு பற்றியதன்று.
  

34.

வேந்துவினை யியற்கை வேந்தன்1 ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்துஇடன் உடைத்தே
  
(34)
 

ஆ.மொ.இல.
  

Even those other than the thing may
do the duties of the king.
  

பி.இ.நூ.
  

இறை 37, 38
  

வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கும் உரித்தே
அரசர் அல்லா ஏனை யோர்க்கும் 
புரைவ தென்ப ஓரிடத் தான.
  

இளம்பூரணர்
  

34. வேந்துவினை.................உடைத்தே.
  

இது, வணிகர்க்கும் உரியதொரு பிரிவு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)     வேந்துவினை இயற்கை-வேந்தனது வினை இயற்கையாகிய தூது,  வேந்தன் ஓரீஇய ஏனோர்
மருங்கினும்  வேந்தனை  ஒழிந்த  வணிகர்க்கும் வேளாளர்க்கும், எய்து   இடன் உடைத்து -  ஆகுமிடன்
உடைத்து.
  

வேந்தனது   வினை   -  வேந்தற்குரிய  வினை  ‘இடனுடைத்து’  என்றதனான்  அவர்  தூதாங்காலம்
அமைச்சராகிய வழியே நிகழும் என்று கொள்க. (ஏகாரம் ஈற்றசை)      (34)
  


1. வேந்தனின்-நச். பாடம்.