இளம்பூரணர் |
35. பொருள்வயின்.....................உரித்தே. |
இதுவும் அது. |
(இ-ள்) பொருள் வயின் பிரிதலும் அவர்வயின் உரித்து-பொருள் வயிற்பிரிவும் மேற் சொல்லப்பட்ட வணிகர் வேளாளரிடத்தில் உரியதாகும் (ஏகாரம் ஈற்றசை) |
36. உயர்ந்தோர்..................தான |
இஃது அந்தணர் பொருட்டுப் பிரியுந்திறன் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான -உயர்ந்தோராகிய அந்தணர் பொருள்வயிற் பிரியுங்காலத்து ஒழுக்கத்தானே பிரிய. |
இதனாற் சொல்லியது, வணிகர்க்கும் வேளாளர்க்கும், வாணிகம் முதலாயின பொருணிமித்தம் ஆகியவாறு போல அந்தணர்க்கு இவை பொருணிமித்தம் ஆகா என்பதூஉம், அவர்க்கு இயற்கையொழுக்கமாகிய ஆசாரமும், செயற்கையொழுக்கமாகிய கல்வியுமே பொருட்டு காரணமாம் என்பதூஉம் கண்டவாறு. (ஈற்றகரம் சாரியை) (36) |
நச்சினார்க்கினியர்1 |
35. பொருள்வயிற்..................தான |
இஃது அக்குறுநில மன்னர்க்குப் பொருள்வயிற் பிரிதலும் உரியவென்கிறது. |
(இ-ள்) பொருள் வயினும் - தமக்குரிய திறையாகப் பெறும் பொருளிடத்தும்; உயர்ந்தோர் ஒழுக்கத்துக்கு ஆன பொருள்வயினும்-உயர்ந்த நால்வகை வருணத்தார்க்குரிய ஒழுக்கத்திலேயான ஒத்திடத்தும்; பிரிதல் அவர்வயின் உரித்து - பிரிந்து சேறல் அக்குறுநில மன்னரிடத்து உரித்து என்றவாறு. |
1. உரை பொருந்துமாறு ஆய்க. |