பக்கம் எண் :

250தொல்காப்பியம் - உரைவளம்

பொருள்வயிற்பிரிதல்     பொருள் தேடுகின்ற இடத்தின்    கண்ணென   வினைசெய்யிடமாய் நின்றது.
உயர்ந்தோர்க்குரிய  வோத்தினான்  என்று அவ்வோத்தினை அவரொழுக்கத்திலேயான    பொருளென்றார்;
அச்சூத்திரத்திற்   கூறிய  ஓதற்பிரிவே  இவர்க்கும்  உரித்தென்று  கொள்க.   இவற்றுக்குச்    சான்றோர்
செய்யுட்களுள் வழிப்பொருள் படுமாறு உய்த்துணர்ந்து கொள்க.
  

பாரதியார்
  

35. பொருள்வயின்... ... ... ... ஓழுக்கத்தான
  

கருத்து:- இது   மேலதற்கோர்   புறனடை;   குறுநில   மன்னர்க்குப்   பொருட்பிரிவும்  உண்டென்று
கூறுகின்றது.
  

பொருள்:-   பொருள் வயிற்பிரிதலும்-பொருள் பற்றிய பிரிவும்;  அவர்வயினுரித்தே-மேற்குறித்த குறுநில
மன்னர்களுக்குரியதாகும்;   உயர்ந்தோர்  பொருள்வயின்,  ஒழுக்கத்தான- பொருள்பற்றி    உயர்ந்தோரின்
ஒழுக்கத்தொடு பட்டவிடத்தில்.
  

குறிப்பு:-     வேந்தரனைய குறுநில மன்னர்க்குத், தற்பேணல் முதலிய பொதுவற மாற்றும்  பொருட்டு
பொருட்பிரிவு  பொருந்தாது;   காடு  திருத்தி  நாடாக்கல்,  குளதொட்டுக் கோயிலெடுத்தல்,  படை பேணி
நாடாளல்  போன்ற    மேலொழுக்கம்  பற்றி  அஃதமையும்  எனக்குறித்தல் இதன் கருத்தாகும்.  வேந்தர்
வினையனைத்தும்      குறுநில    மன்னர்க்குப்    பாலைத்திணையில்    உரியவாகும்   என   மேலே
குறிக்கப்பட்டமையால்,    வேந்தனுக்கு விலக்கப்பட்ட பொருள்வயிற் பிரிவு குறுநில மன்னர்க்கும் விலக்கோ
எனுமையமகற்றி அவர்க்கது கடிவரையின்று என்பதை இந்நூலார் இச்சூத்திரத்தால் விளங்க வைத்தார்.
  

“அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றங் காதலர்”  
  

(கலி-11)
 

என்னும் பாலைக்கலியடிகள் இச்சூத்திரத்தை விளக்குவதறிக.
  

மேல்  ‘பெயரும்  வினையும்’  என்னும்  20ஆம்  சூத்திர  முதல்  இது  வரையுள்ள  சூத்திரங்களால்,
தொல்காப்பியர் தமிழகத்தில் அகத்திணைக்குரியாரை வகைப்படுத்திக் கூறினார். நானில