37. | முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை. | (37) |
|
ஆ.மொ.இல. |
Voyage is not undertaken with the wife |
பி. இ. நூ. |
நம்பி. 84, 85 |
புலத்திற் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக் கலத்திற் சேறல் கடனன் றென்ப வலனுயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும் குலமட மாதரொடு கலமிசைச் சேறலும் பாசறைச் சேறலும் பழுதென மொழிப |
இல.வி.அ.80,81 |
புலத்திற் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக் கலத்திற் சேறல் கடனன் றென்ப வலனுயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும் குலமட மாதரொடு கலமிசைச் சேறலும் பாசறைச் சேறலும் பழுதென மொழிப |
இளம்பூரணர் |
37. முந்நீர் வழக்கம்.......................இல்லை |
இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை - (ஈண்டு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிற் பிரிவும் கலத்திற் பிரிவும் என இருவகைப்படும் : அவற்றுள்) கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை. |
எனவே, காலிற்பிரிவு தலைமகளை உடன்கொண்டு பிரியவும் பெறும் என்றவாறாம். கலத்திற் பிரிவு, |
தலைமகளை ஒழியப் பிரிந்தமைக்குச் செய்யுள். |
“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக் |