பக்கம் எண் :

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை சூ.37255

தலைவியோடு     செல்லும்   வழக்குண்மை   சான்றோர்  செய்யுட்களில்  யாண்டும்  பயிலாமையானும்,
அவ்வுரை சூத்திரக் கருத்தன்மைதேற்றமாகும்.
  

இனி,  ஓதல்,  பகை,  தூது,  பொருள்,  காவல்  அனைத்தும்  பிரிவு  வகைகளே  யாதலானும், பிரிவு
தலைமக்கள்  தம்முள்  பிரிதலையே  குறிக்குமாதலானும்,  இப்பிரிவைந்தனுள்  எதுபற்றியுந் தலைமகன்
தலைவியுடன்  செல்லுமாறில்லை  யென்பது  தேற்றம்.  அதனாலும் நச்சினார்க்கினியர் கூறும் பொருள்
இந்நூலார் கருத்தாகாமை பெறப்படும்.
  

பின்,     இச்சூத்திரம்  கூறுவது      யாதெனின்,  அன்பினைந்திணைகளுளெதனினு  மடங்காதனவும்
அகவொழுக்கத்திற்கு   உரிப்பொருளா     யமைவனவுமான  களவில்  உடன்போக்கும்,  கற்பில்  ஏற்புழி
மனைவியுடன்  சேறலும்  தமிழ்  மரபென்பதும்,   அவ்வாறு  செல்லுங்கால் பெண்டிரொடு கடல் கடத்தல்
மரபன்  றென்பதுமே யாம். இவற்றுள் முன்னது ‘கொண்டுதலைக்    கழியினும்’ என்னும் இவ்வியல் 15ஆம்
சூத்திரத்தானும் பின்னது ‘மரபு நிலை திரியா’ என்னும் இவ்வியல் 45-ஆம் சூத்திரத்தானும் அமையும்.
  

(I) களவில், கொண்டுதலைக் கழிதலுக்குச் செய்யுள்:
  

“அழிவில முயலு மார்வ மாக்கள்
வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்
கலமரல் வருத்தந் தீர யாழ...........
--------------------------------
நிழல் காண் டோறும் நெடிய வைகி
மணல்காண் டோறும் வண்டல் தைஇ
வருந்தா தேகுமதி, வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்
நறுந்தண் பொழில கானம்
குறும்பல் லூரமாஞ் செல்லு மாறே.
   

(நற்றிணை-9)
 

(I) கற்பில் தன்னை உடன்கொண்டு செல்லக் கொழுநனை
மனைவி வேண்டற்குச் செய்யுள்:
  

“தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்