பக்கம் எண் :

258தொல்காப்பியம் - உரைவளம்

குறிப்பு:-  எத்திணை மருங்கினும் என்றார்; அன்பினைந்  திணைப்பகுதியில்  ஆடவர்போல் பெண்டிர்
மடல்  விரும்புதல்  அமையாமை  மட்டுமன்று;    பெருந்திணையினும் ஏறிய  மடற்றிறம் ஆடவர்க்கன்றி,
புலனெறி  வழக்கில்  மகளிர்க்குக்  கூறுவது  வழக்காறில்லை   என்பதை   வற்புறுத்துதற்கு மேவல்-மேல்
இடைக்குறை.   ஐந்தாம்  பரிபாட்டிலும்  மலைபடு  கடாத்திலும்  ஆரல்-ஆல்   ஆனதுபோல.  மேவல்,
விருப்பப்    பொருட்டு.    “நம்புமேவு   நடையாகும்மே”    (தொல்-சொல்,    உரிசூத்-33)   பேரிசை
நவிரமேஎயுரையும்”  என்னும்  மலைபடு கடாத்தடியுங் காண்க.   ‘இல்லை’ எனஒரு  சொல்லை வருவித்து,
‘ஆன’  என்பதைக்  காரணக்  குறியாக்கி,  பெண்பால்   மடன் மேவவில்லை; பொலிவு  பெறும் நெறிமை
இல்லாமையால்,   என   இளம்பூரணர்   கொண்டாங்குக்    கொள்ளலும்   தள்ளும்     தன்மைத்தன்று
எவ்வாற்றானும்  மடலேறுதல்  எனப்பொருள்  கொள்ளுதல்   பொருந்தாது   ஆடவர்க்குமே மடலேறுதல்
பொற்புடை   நெரிமைக்கு   மாறாக,   “நோந்திறத்தின்   பாற்பட்ட  காதலற்ற   கழிகாமப்பழி  பிறக்கும்
இழிதகவுடைய  பெருந்திணையின்  பாற்படும்  என்பது   “ஏறிய  மடற்றிறம்    பெருந்திணைக் குறிப்பே”
என்னும்  சூத்திரத்தானும்  வலுயுறும்  மடல்  ஏறாமல்,  மடல் ஊர்வேன்  எனக் கூறுதலும்  ஆடவர்பால்
பொற்புடை  நெறியாக்காமல் ஒரோவிடத்துப் புலநெறி  வழக்கில் அமைத்துக்  கொள்ளப்படுகிறது ‘மடன்மா
கூறும்  இடனுமாருண்டே”  எனுந்  தொல்காப்பியச்   சூத்திரத்தால் மடன்மா  கூறுவதும் ஆடவரளவிலும்
நன்மரபாகாமல்,   ஓராங்கு   மரபு   வழுவமைதியாக    மட்டும்   கொள்ளப்படும்    தமிழ்   வழக்குத்
தெளிக்கப்பட்டது  அதன் காரணமும் எளிதில் அறியப்படும்.  “ஊரறிய ஏறிய மடற்றிறம்”   ஆடவருக்கும்
பொருந்தாக்காமமாம்  பெருந்திணை  எனக்  கடியப்படுகிறது   ஏறாமல் தனியிடத்தே  மடலூர்வேன் என
மட்டும் தலைமகன் ஒரோவழிக் கூறுதல் அமைத்துக் கொள்ளப்பட்டது; ஏனெனில்   தலைவன் தன் காதற்
பெருக்கை  விளக்குமள விற்றாகி, தலைவியின் உறுதுணையாம் தோழிக்கு அவன்   தனித்துத் தலைவியின்
இன்றியமையாமையை  வலியுறுத்தும்  கருத்துடைமை  காட்டும்  கருவியாக்குதலால்,     மடன்மா கூறுதல்
அகப்பகுதியில்  ஆண்மகனுக்கு  மரபு  வழுவமைதியாக  மட்டும்  ஆளப்படும்.     இப்புலனெறி வழக்கு
மறுத்ததற்கில்லை   என்பதைத்   தொல்காப்பியர்,  “மடன்மா  கூறுமிடனு    மாருண்டே’  என்று  கூறி,
உம்மையாலும் ஏகாரத்தாலும் அதுவும் நன்மரபன்றென்பதை இனிதுபெற விளக்கினார்.