பக்கம் எண் :

எத்தனை மருங்கினும் மகடூ மடல்மேல் சூ.38259

ஆதலால்    மடலேற  அவாவுதல்  ஒருவாறு  ஆடவர்க்கு மரபு வழுவமைதியாக மட்டும் அமையுமெனக்
காட்டும்  ஆசிரியர்,  மகளிர்க்கு  யாண்டும்   பொற்புடை   நெறிமையாகாது  என்பதைச் சூத்திரத்தால்
விலக்குவாரானார். இதுவே தமிழ் மரபென்பது:
  

“கடலன்ன காமம் உழந்தும் 'மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்” என்னும் குறளாலும்
  

“அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையிற் கேட்டறிவதுண்டு-அதனையாம் தெளியோம்
மன்னும் வடநெறியே வேண்டினோம்”

  

என்னும்     திருமங்கை  யாழ்வாரின்  பெரிய  திருமடலின்   அடிகளாலும்  தெளியப்படும். "மடலேறாப்
பெண்ணிற்  பெருந்தக்க  தில்”  என்பதும்  தலைவன்  கூற்றேயாகலானும் மடல் ஊர்வேனென்று தலைவி
கூறுதலாக  யாண்டும்  ஆன்றோர்  செய்யுள்    செய்யாமையானும், மடல் ஏறும் விருப்பமும் மகளிர்க்குப்
பொற்புடை நெறியாகாமை தேறப்படும் மேலும்.
  

“உடம்பும் உயிரும் வாடியக் காலும்
...............................................................
கிழவோர் சேர்தல் கிழத்திக் கில்லை”
  

என்னும்    பொருளியற் (10)  சூத்திரத்தால்  மணந்து   கணவனுடன்  வாழும் மனைவியும் கணவனுக்குமே
தன்   காதலைக்   கரத்தலே   பெண்ணியல்பென      வலியுறுத்தப்படுகின்றது.  தனியிடத்துக்  கொண்ட
கணவனுக்கும்   கரத்தற்குரிய  தன்  காதலை  ஊரறிய    மடலேறிப்பறை  அறைவேனெனல்,  நாணொடு
நிறையைப் பூணாகக் கொண்ட பெண்டகைமைக்கு முற்றிலும் இயைபற்றதாகும். இதனாலன்றோ,
  

“காமத் தினையிற் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மையை ஆதலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள்வயி னான”
  

எனுங்  களவியற்  (17)  சூத்திரத்தால்  தொல்காப்பியர்,   களவில் தலைவியரிடம் கடலன்ன காமவேட்கை
குறிப்பானன்றி நெறிப்