பக்கம் எண் :

260தொல்காப்பியம் - உரைவளம்

படாமையையும், அவ்வாறு நெறிப்படின் அது பொற்புடைமை ஆகாமையையும் வற்புறுத்தினார்.
  

இத்தமிழ் மரபுக்கு மாறாக,
  

“கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர்
மடலூரார் மைந்தர்மே லென்ப-மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான்
வேட்டமா மேற்கொண்ட போழ்து”
   

என     நச்சினார்க்கினியர்  உரையில்  மேற்கொள்  காட்டினாராலெனின்  பண்டை நூன் மரபுக்கு மாறாக,
பெண்டிரெல்லாரும்  யாண்டும்,    எந்நிலையிலும்,  ஆடவரெழிலுக்கு  உடையுமுள்ளத்தினர் எனக் கூறும்
உலா, மடல் முதலிய பனுவல் எழுந்த   தகுதியும் மரபும் தலை தடுமாறிய பிற்கால வழக்கென மறுக்க.
  

சிவலிங்கனார்
  

இச்சூத்திரம் தலைமகள் மடல்கூறுதலும் மடல் ஏறுதலும் இல்லை என்கின்றது.
  

(இ-ள்)  எழுதிணைகளுள்   எத்திணையொழுக்கத்திலும்   பெண்   மடல்   விரும்புதலோ  கூறுதலோ
ஏறுதலோ இல்லை; ஏன்எனின்  அது பெண்மைக்குரிய பொலிவுடைமை இல்லை யாதலின் என்றவாறு.
  

மடல்மேல்   என்பதையடுத்து   இல்லை என ஒரு சொல் வருவிக்க மேவல் என்பது மேல் என நின்றது
என்னும்  பாரதியார் கூற்று சிறப்புடையது. அதனால் மகடூஉ மடலை விரும்புதலும் அதன் காரணமாகக்
கூறுதலும் ஏறுதலும் இல்லை என்க.
  

‘மடன்மா     கூறும்      இடனுமா  ருண்டே’  (  )   என்னும்  சூத்திரத்தை  யடுத்து  இச்சூத்திரம்
கூறப்பட்டிருப்பின்  தலைவன்   மடல்  ஏறுவேன் எனக்கூறுதல் உண்டு; ஆனால் தலைவி கூறுதல் அதன்
ஐந்திணையுள் இல்லை எனத் தொடர்பாகக்   கொள்ளலாம்.  ‘ஏறியமடற்றிறம்’ ( ) என்னும் பெருந்திணைச்
சூத்திரத்தின்   பின்னர்க்   கூறியிருப்பின்    பெருந்திணையிலும்   மகடூஉ  மடல்  ஏறல்  இல்லைஎனக்
கொள்ளலாம்.  “காமஞ்சாலா  இளமையோற்வயின்”    (  ) என்னும் கைக்கிளைச் சூத்திரத்தின் பின்னர்க்
கூறுதற்கில்லை; ஏன்எனின் கைக்கிளை தலைவனைப் பற்றியதாகவே கூறப்படும் செய்யுளும்