செவிலி அறத்தொடு நிற்றலிற் கவலையிற் பாங்கி தன்னொடும் பாங்கியர் தம்மொடும் அயலார் தம்மொடும் பயிலிடந் தம்மொடும் தாங்கல ளாகிச் சாற்றிய வெல்லாம் பூங்கொடி நற்றாய் புலம்பற் குரிய நிமித்தம் போற்றலும் சுரம்தணி வித்தலும் தன்மகள் மென்மைத் தன்மைக் கிரங்கலும் இளமைத் தன்மைக்கு உளம்மெலிந் திரங்கலும் அச்சத் தன்மைக்கு அச்சமுற் றிரங்கலும் எனஇவை ஐந்தும் அனைமருட்சிக் குரிய. |