தன்னும் அவனும் அவளும் சுட்டியென்பது, தன்னையும் தலைமகனையும் தலைமகளையும் குறித்த என்றவாறு, மன்னு நிமித்தமாவது ஆட்சி2 பெற்ற நிமித்தம்; அது பல்லி முதலாயினவாம்3 மொழிப் பொருளாவது பிறர் தம்முள் கூறும் மொழிப்பொருளை நிமித்தமாகக் கோடல்; அதனை நற்சொல்4 என்ப தெய்வம் என்பது, உலகினுள் வாழும் இயக்கர் முதலாயினார் ஆவேசித்துக் கூறும்சொல். நன்மை தீமை அச்சம் என்பது, தனக்கும் அவர்க்கும் உளதாகிய நன்மையும் தீமையும் அச்சமும் என்றவாறு. சார்தல் என்பது, அவர் தன்னை வந்து சார்தல் என்பது இடைச்சொல்5 அன்ன பிறவும் என்பது, அத்தன்மைய பிறவும் என்றவாறு, அவற்றொடு தொகைஇ என்பது மேற்சொல்லப்பட்ட நிமித்தம் முதலாயினவற்றோடு கூட்டி என்றவாறு அவ்வழியாகிய கிளவியும் உரிய என்பது அவ்விடத்தாகும் கூற்று உரியஎன்றவாறு*. |
1. உடன்போக்கில் நிகழ்ந்த கிளவி என்க. 2. ஆட்சி - செய்யுளாட்சி 3. பல்லி-பல்லிசொல்லல், காக்கை கரைதல் முதலியனவுமாம் 4. நற்சொல் - விரிச்சி 5. எண்ணும் மைப்பொருளில் வரும் இடைச்சொல். நிமித்தம் என்று மொழிப்பொருள் என்று இப்படிக் கூட்டவரும். * இப்பகுதி இதன்பொருள் என்பதன் பின்னர் இருத்தல் வேண்டும். |