பக்கம் எண் :

தன்னும் அவனும் அவளும் சூ.39265

என்பது நற்றாய் உடன்போய தலைமகள் பொருட்டாகக் காகத்திற்குப் பாராய்க் கடன் உரைத்தது.
  

“வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தால்
கூறாயோ கூறுங் குணத்தினனாய்-வேறாக
என்மனைக் கேறக் கொணருமோ எல்வளையைத்
தன்மனைக்கே உய்க்குமோ தான்”.
  

(திணைமாலை நூற்-60)
  

என்பது நற்றாய் தலைமகளின் உடன்போக் கெண்ணிப் படிமத்தானை8 வினாஅயது
  

பிறவும் அன்ன. ‘ஈன்றவள் புலம்பலும் என்ற உம்மையால்’ செவிலி புலம்பலும் கொள்ளப்படும்.
  

“பெயர்த்தனென் முயங்கான் வியர்த்தனென் என்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழல்தொட யாஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையுங் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினுந் தான்தண் ணியளே.” 
  

(குறுந்-84)
  

என்பது, உடன்போக்கிய செவிலி கவன்றுரைத்தது.
  

“என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு
அழுங்கல் மூதூர் அலரெழச்
செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே.” 
  

(ஐங்குறு-372)

என்பது, தலைமகள் கொடுமை நினைந்து கூறியது.
  

“ஈன்று புறந் தந்த எம்மும் உள்ளாள்
வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி இரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
  


8. படிமத்தான்-நோன்பு ஒழுக்கத்துக்கேற்ற தோற்றமுடையான்.