பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.117

வாம்     பாலையைப்  பொதுவாக்கி,  ஏனைய  நான்கினையும்  தத்தமியல்பால்   நால்வகைப்பட்ட  ‘தமிழ்
கூறும்’   நல்லுலக  நானிலப்  பகுதிகளில்   ஒவ்வொன்றிற்கும்  முறையே   சிறப்பியைபுபற்றி    வகுத்துப்
பொருத்திய  மரபு  இரண்டாஞ்  சூத்திரத்திற்  கூறப்படுகிறது. காடும், மலையும், ஊருங், கடலுமான நானிலப்
பகுதிகளும்,  அவ்வந்  நிலத்தில்   சிறந்த   முல்லை,  குறிஞ்சி,  மருதம்   நெய்தல்  எனும்  அடையாளப்
பூக்களால்   அழைக்கப்படுதலின்,  அவ்வப்பகுதிக்குச்  சிறந்தியைந்த  அக வொழுக்கங்களும்  அவ்வந்நிலப்
பூப்பெயர்களே    கொள்வனவாயின.    பூப்பெயர்    கொள்ளும்    இம்முறையைத்   தழுவியே  ஏனைப்
பிரிவொழுக்கமும்   நானிலங்களிலடங்காத   சுரங்களிற்    பெரும்பாலான   பாலைப்   பூவின்   பெயரால்
வழங்கலாயிற்று.
  

இனி,     அகப்பொருள்   முதல்   கரு  உரியென மூன்று கூறப்படுமென்பது மூன்றாஞ் சூத்திரத்தாலும்,
அவற்றுள்  முதல்  பொருள் நிலமும் பொழுது  மென்றிரு  வகைப்படு   மென்பது நாலாஞ் சூத்திரத்தானும்
விளக்கப்பட்டன ஐந்தாஞ் சூத்திரத்தில் நில  முதற்பொருளின்   இயல்பும் வகையும்  கூறப்பட்டன.  1 முதல்
101  வரையுள்ள  ஆறு   சூத்திரங்களால்   காலமுதற்  பொருள்  அன்புத்திணை  ஐந்தனொடு பொருந்தும்
இயைபு  விளக்கப்பட்டது.  102, 103  ஆம்  சூத்திரங்களில்  அகவொழுக்க  வகைகளும்  முதற்பொருளின்
கூறுகளும்   முன்   விளக்கிய    முறையேயன்றி    வேறுபட்டுத்   தம்முள்  விரவி  வருதலுமுண்டெனக்
குறைக்கப்பட்டது.  104-ஆம்  சூத்திரத்தில்  உரிப்பொருட்குச்  சிறந்த  ஒத்த  காதல்  ஒழுக்கச் சிறப்புவகை
ஐந்தனியல்பும்  105,  106-ஆம்  சூத்திரங்களில் அவ்வைந்தனுளடங்காது அவை போலவே   சிறப்புடைய   பொதுவகை அகவொழுக்கங்கள் சிலவும்   கூறப்பட்டன.  107-ஆம்  சூத்திரம்   உரி   கருப்பொருள்கள்   பல்வேறு  வகைப்படுவன  போலன்றி  முதற்பொருள்  நிலம்   பொழுதிரண்டே   வகைப்படுமென்பதை  வலியுறுத்துகிறது. 108,  109-ஆம்  சூத்திரங்கள் அகப்பொருள்  வகை  மூன்றனுள் எஞ்சிய   கருப்பொருள் வகைகளும் முறையே அகவொழுக்கங்களுக்கு ஏற்ற பெற்றி இயைந்தும் இயையாமலும் வருமாறு கூறும்.
  

20   முதல்   24   வரையுள்ள  சூத்திரங்களால்  அகவொழுக்க  மரபுகளுக்குப்  பலதிறப்பட்ட  தமிழ்
மக்களின் உரிமை விளக்கப்பட்டது. 25 முதல் 33 வரையுள்ள சூத்திரங்களில் அக