பக்கம் எண் :

தன்னும் அவனும் அவளும் சூ.39269

தந்தை   தன்னையர்   சென்றாரென்று  சான்றோர்  செய்யுட்  செய்திலர்?  அது  புலனெறி  வழக்கம்
அண்மையின்.
  

இனிச் சார்தலும் இருவகைத்து; தலைவி சென்று சாரும் இடனும், மீண்டு வந்து சாரும் இடனுமென.
  

உதாரணம்:
  

“எம்வெங் காமம் இயைவ தாயின்
மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாக லார்கைப் பறைக்கட் டீலித்
தோகைக் காவின் துளுநாட் டன்ன
வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட் டாகுக தில்ல
தோழி மாரும் யானும் புலம்பச்
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி யன்ன கடியுடை வியன்நகர்ச்
செறிந்த காப்பிகந் தவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
ருய்த்த வாய துகள்நிலம் பரக்கக்
கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி
வன்கை யெண்கின் வயநிரை பரக்கும்
இன்றுணைப் பிரிந்த கொள்கையொ டொராங்குக்
குன்ற வேயில் திரண்ட என்
மென்றோள் அஞ்ஞை சென்ற ஆறே. 
   

(அகம்-15)

“அருஞ்சுரம் இறந்தவென் பெருந்தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனைமணல் அடுத்து மாலை நாற்றி
உவந்தினி தயரூ மென்ப யானு
மான்பிணை நோக்கின் மடநல் லாளை
யீன்ற நட்பிற் கருளான் ஆயினும்
இன்னகை முறுவல் ஏழையைப் பன்னாட்
கூந்தல் வாரி நுசுப்பிவர்ந் தோம்பிய
நலம்புனை யுதவியும் உடையன் மன்னே
அஃநறி கிற்பினோ நன்றுமற் றில்ல