பக்கம் எண் :

270தொல்காப்பியம் - உரைவளம்

அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச்
சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல்
ஆகுவ தறியும் முதுவாய் வேல
கூறுக மாதோநின் கழங்கின் றிட்பம்
மாறாது வருபனி கலுழுங் கங்குலின்
ஆனாது துயருமென் கண்ணினிது படீஇயர்
எம்மனை முந்துறத் தருமோ
தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே”
  

(அகம்-195)
  

இவ் வகப்பாட்டு இரண்டும் தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது.
  

“இல்லெழும் வயலை யிலையு மூழ்த்தன
செல்வ மாக்களிற் செல்லு மஃகின
மயிலடி யிலைய மாக்குரல் நொச்சிப்
பயிலிணர் நறும்பொழிற் பாவையுந் தமியள்
ஏதி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு
பேதை போயினள் பிறங்குமலை யிறந்தென
மான்ற மாலைமனையொடு புலம்ப
ஈன்ற தாயு மிடும்பைய ளென நினைந்து
அங்கண் வானத் தகடூர்ந்து திரிதருந்
திங்களங் கடவுள் தெளித்துநீ பெயர்த்தரிற்
கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய
குடுமியஞ் செல்வங் குன்றினுங் குன்றாய்
தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை
ஒண்புகழ்த் தந்தைக் குறுதி வேண்டித்
தயங்குநடை முதுமை தாங்கித் தான்றனி
யியங்குநடை யிளமை யின்புற் றீந்த
மான்றே ரண்ண றோன்றுபுகழ் போலத்
துளங்கிரு ளிரவினு மன்றி
விளங்குவை மன்னாலிவ் வியலிடத் தானே.”  

(தகடூர் யாத்திரை)
  

இத் தெய்வத்தை நோக்கிக் கூறியது.
  

“மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
யன்புடை மரபினன் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்திளை வல்சி