பக்கம் எண் :

272தொல்காப்பியம் - உரைவளம்

“என்னு முள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொ
டழுங்கண் மூதூ ரலரெழச்
செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே.”
  

(ஐங்குறு-372)
  

இஃது என்னை நினைப்பாளோவென்றது.
  

இன்னும் இதனானே செய்யுட்களுள் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் அமைத்துக் கொள்க.
  

“செல்லிய முயலிற் பாஅய சிறகர்
வாவ லுகக்கு மாலையாம் புலம்பப்
போகிய வவட்கோ நோவேன் றேமொழித்
துணையிலள் கலுழு நெஞ்சின்
இணைபே ருண்க ணிவட்குநோ வதுவே.”
  

(ஐங்குறு-318)
  

இது   தோழி   தேஎத்துப்புலம்பல்.   இஃது   ஐங்குறுநூறு   தோழி   தோத்துமெனப்   பொதுப்படக்
கூறியவதனால் தோழியை வெகுண்டு கூறுவனவுங் கொள்க.
  

“வரியணி பந்தும் வாடிய வயலையு
மயிலடி யன்ன மாக்குர னொச்சியுங்
கடியுடை வியனகர்க் காண்வரத் தோன்றத்
தமியேன் கண்டதண் டலையுந் தெறுவர
நோயா கின்றே மகளை நின்றோழி
யெரிசினந் தணிந்த இலையி லஞ்சினை
வரிப்புறப் புறவின் புலம்புகொ டென்விளி
யுருப்பவி ரமையத் தமர்ப்பன ணோக்கி
யிலங்கிலை வெள்வேல் விடலையை
விலங்குமலை யாரிடை நலியுங்கொ லெனவே.”
  

(நற்றிணை 305)
  

எனவரும்.
  

“இதுவென் பாவைக் கினியநன் பாவை
யிதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி
யிதுவென் பூவைக்கிளியசொற் பூவையென்