றலம்வரு நோக்கி னலம்வருஞ் சுடர்நுதல் காண்டொறுங் காண்டொறுங் கலங்க நீங்கின ளோவென் பூங்க ணோளே.” |
(ஐங்குறு 375) |
இவ் வைங்குறுநூறு தேடிக் காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது. |
இனி அவ்வழியாகிய கிளவிகளுட்சில வருமாறு: |
“ஒருமக ளுடையயேன் மன்னே யவளுஞ் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை யருஞ்சுர நெருநற் சென்றனள் இனியே தாங்குநி னவல மென்றனி ரதுமற் றியாங்கன மொல்லுமோ வறிவுடையீரே யுள்ளி னுள்ளம் வேமே யுண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமக ளாடிய மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே.” |
(நற்றிணை 184) |
இந் நற்றிணை தெருட்டும் அயலில்லாட்டியர்க் குரைத்தது. |
“கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக் களிறுவிளிப்படுத்த கம்பலை வெரீஇ ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி தாதெரு மறுகின் மூதூ ராங்கண் எருமை நல்லான் பெருமுலை மாந்தும் நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு ஆயமும் அணியிழந் தழுங்கின்று தாயும் இன்றோள் தாராய் இறீஇயரென் னுயிரெனக் கண்ணு றுதலு நீவித் தண்ணெனத் தடவுநிலை நொச்சி வரிநிழ லசைஇத் தாழிக் குவளை வாடுமலர் சூடித் தருமணற் கிடந்த பாவையென் அருமக ளெயென முயங்கின ளழுமே.” |
(அகம்-165) |
இம் மணிமிடை பவளத்துத்தாய் நிலையும் ஆயத்து நிலையுங் கண்டோர் கூறியவா றுணர்க. |