பக்கம் எண் :

274தொல்காப்பியம் - உரைவளம்

“மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த
வன்பி லறனு மருளிற்று மன்ற
வெஞ்சுர மிறந்த அஞ்சி லோதி
பெருமட மான்பிணை யலைத்த
சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே.”
  

(ஐங்குறு-396)
  

இவ்வைங்குறுநூறு தலைவி மீண்டு வந்துழித்தாய் சுற்றத்தார்க்குக் காட்டியது.
  

“நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினு
சொல்லி னெவனோ மற்றே வென்வேன்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே.”
  

(ஐங்குறு-399)
  

இவ்  வைங்குறுநூறு  தலைவன்  மீண்டு  தலைவியைத் தன் மனைக்கட் கொண்டு வந்துழி அவன் தாய்
சிலம்புகழி நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டு நின்றும் வந்தார்க்குக் கூறியது.
  

இன்னுஞ் சான்றோர் செய்யுட்களுள் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.
  

39. தன்னும்... ... ... ... உரிய
  

பாரதியார்
  

கருத்து:-   இது   தலைவனுடன்போன   தலைவியின் பிரிவாற்றாத   தாயாரின்  பரிவு  நிலைமையும்,
அதுபற்றிக் கூற்று நிகழும் பகுதிகளும் கூறுதல் நுதலிற்று.
  

பொருள்:-   போகிய திறத்து நற்றாய் புலம்பலும்-தலைமகள் தலைவனுடன் போனவழி, அவளைப் பெற்ற
நற்றாயின்   துனிதரும்  தனிமையில்  மகட்பிரிவின்    அகப்பிரிவாற்   கூறுவனவும்,  தன்னும்  அவனும்
அவளுஞ்  சுட்டி-தன்னையும்  தலைமகனையும்      (அவனுடன் சென்ற) தன்  மகளையும் குறித்து; மன்னு
நிமித்தம்  -  அடிப்பட்ட  புள்  என்னும்    நிமித்தங்களோடும்;  மொழிப்பொருள்  -   விரிச்சி என்னும்
நற்சொல்லோடும்;  தெய்வம்  -  வேலன்   வெறியாடல்  முதலிய  கடவுட் பராவலோடும்;  நன்மை தீமை
அச்சம்  சார்தல் என்பவற்றோடும்; அன்ன    பிறவும் - அத்தகைய இடங்களுக்கேற்ற பிற  கூற்றுகளையும்;
அவற்றோடு தொகைஇ மேற்