பக்கம் எண் :

தன்னும் அவனும் அவளும் சூ.39275

கூறியவற்றொடு     சேர்த்து;  முன்னிய  காலம்  மூன்றுடன்    விளக்கி; இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய
மூன்று  காலங்களோடும்  இயையவிளக்கி;  தோழி  தேஎத்தும்   கண்டோர்   பாங்கினும்  - தலைவியின்
தோழியிடத்தும்,  தலைமக்களைக்  கண்டு  வருவோரிடத்தும்;  ஆகிய கிளவியும்  -  நிகழும் கூற்றுகளும்;
அவ்வழி உரிய - அந்நிலையில் உரியனவாகும்.
  

குறிப்பு:-   போகிய  திறத்து  என்பதை  முன்னே  கூட்டிச்    சூத்திரத்  துறைகள்  அனைத்திற்கும்
பொதுவாக்கிப்  பொருள்  கொளலே  பொருந்தும்.  ‘ஆகிய  கிளவி’    என்பதனை,  “தன்னும் அவனும்
அவளும்   சுட்டி”   என்பது   முதல்   ‘மூன்றுடன்   விளக்க’   ஒவ்வொன்றனோடும்  என்பது  வரை
ஒவ்வொன்றனோடும்   ‘தோழி   தேஎத்தும்   கண்டோர்   பாங்கினும்    புலம்பலும்’  என்பவற்றோடும்
தனித்தனிக்கூட்டுக.  ‘அவ்வழி’  என்பது  அவ்வாறு உடன்போகிய மகட்பிரிவுக்கு   வருந்தும் பாங்கினும்,
வருந்திக்  கூறலைச்  சுட்டலாகப்  பொருள்  கோடல்,  ‘புலம்பே  தனிமை’ (உரி-33)   என்னும் சூத்திரக்
கருத்துக்கு  மாறாகும்.  ஆதலால்  நற்றாயின்  தனிப்படர்  இரக்கத்தையே அச்சொல்   உணர்த்துமென்க.
‘நிமித்தம்   என்பது   காக்கை   கரைதல்,  பல்லிஒலி,  ஓந்திநிலை,  இடத்தோள்    இடக்கண்  துடிப்பு
முதலியவைகளைக்  கொண்டு  நன்மை தீமை துணிதல் இதற்குப் புள்ளறிதல் என்றே   பெயர் வழங்கிற்று.
முதலில்  பறவையைக்  குறிக்கும்  புள்  என்னும்  பெயர் நாளடைவில் எல்லாக்  குறிகளையும் குறிக்கும்
நிமித்தத்திற்கே  வழங்கலாயிற்று. மொழிப்பொருள் என்பது நற்சொல்; விரிச்சி, மொழிப்பொருள்   என்பன
ஒரு பொருட் கிளவிகள். விரிச்சியை,
  

“வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு
ஈண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று,”
 
  

என்பர் புறப்பொருள் வெண்பாமாலையார்.
  

“இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி
பைந்தா தெருவின் வைகுதுயின் மடியுஞ்
செழுந்தண் மனையோ டெம்மிவ னொழியச்
செல்பெருங் காளை பொய்மருண்டு, சேய்நாட்டுச்
சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த
குவளை உன்கண்என் மகளோ ரன்ன
செய்போழ் வெட்டிப் பெய்த லாய