பக்கம் எண் :

276தொல்காப்பியம் - உரைவளம்

மாலைவிரி நிலவிற் பெயர்புறங் காண்டற்கு
மாருயிந் தாழி கவிப்பத்
தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே.”
  

(நற்றிணை 271)
  

இச்செய்யுளின்     ‘எம் இவண் ஒழிய எனவும்,’ ‘எற்கொள்ளாக்    கூற்றே’ எனவும் தாய் தன்னையே
சுட்டியும்,  ‘செல்பெருங்காளை  பொய்  மருண்டு’  எனத்  தலைவனைச்     சுட்டியும்  ‘விசுனைச் சிறுநீர்
குடியினள் கழிந்த குவளையுண்கண் என் மகள் என் உடன் போன மகளைச்    சுட்டியும் கூறுதல் காண்க.
  

“என்னும் உள்ளினள் கொல்லோ, தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு
அமுங்கல் மூதூர் அலரெழச்
செழும்பல் குன்றம் இறந்தவென் மகளே.”
  

(ஐங்-372)
  

எனும் செய்யுளுமது.
  

II நிமித்தத்தோடு சார்த்தி நற்றாய் கூறும் கிளவிக்குச் செய்யுள்:
  

“மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபினின் கிளியோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொடு
அஞ்சி லோதியை வரக்கரைந் தீமே.”  
  

  (ஐங்-391)
 

III மொழிப்பொருள் என்ற நற்சொல்லாம் விரிச்சியொடு படுத்து கூறுதற்குச் செய்யுள்:
  

“அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
னுறுதுய ரலமர னோக்கி யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள், கைய