‘அருஞ்சுர மிறந்தஎன் பெருந்தோட்குறுமகள்’ என்னும் அகம் (195) ஆம் பாட்டில், “அறுவை தோயும் ஒரு பெருங்குடுமிச் சிறுபைஞ்ஞாற்றிய பஃறலைக்கருங்கோல், ஆகுவதறியும், முதுவாய் வேல, கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம், ஆறாது வருபனி கலுழும் கங்குலின் ஆனாது துயரும் என்கண் இனிது படீஇயர், எம்மனை முந்துறத் தருமோ, தம்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே” எனவரும் அடிகள் தெய்வத்தொடு படுத்து நற்றாய் கூறும் கிளவியாகும். |