பாலும் பலவென உண்ணாள் கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே.” |
(குறு-326) |
“நீர்நசைக் கூக்கிய உயவல் யானை இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள் மன்றஎன் மகளே பந்தும் பாவையும் கழங்குமெமக் கொழித்தே” |
என்பதும் அது. (ஐங்-377) |
VII. “அன்ன பிறவும்” என்றதால் சூத்திரத்தில் விதந்து கூறியன வல்லாத பிறபொருந்துந் துறைகளும் சுட்டப்பட்டன. தலைவினற்றாய் தன் மகளையுடன் கொண்டு சென்ற தலைவன் தாயை வெறுத்து நொந்து கூறுவது, “அன்னபிற” வற்றுள் ஒன்றாகும் அதற்குச் செய்யுள்: |
“நினைத்தொறுங் கவிழும் இடும்பை எய்துக. புலைக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை மாண்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும் வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே” |
(ஐங்-378) |
VIII. ‘முன்னியகாலம் மூன்றுடன் விளக்கிப் போகிய திறத்து’ நற்றாய் கூற்றுக்குச் செய்யுள்: |
“பிரசங் கலந்த சிறுமதி கையளே” |
எனும் போதனார் நற்றிணைப் பாட்டில், |
“----------------------பூந்தலைச் சிறுகோல் ‘உண்’ என றோக்குபு புடைப்ப - - - அறிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரீஇ மெலிந்தொழியப் பந்த ரோடி ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்; ஒழுகுநீர் நுணங்தறல் போலப் பொழுது மறுத் துண்ணுஞ் சிறுமது கையளே.” |
(நற்றிணை-110) |