எனுமடிகளில், தன் மகளின் கழிந்த இளமைச் செய்தியும் அறிவொழுக்க நிகழ் காலச் செய்தியும், அவள் மனையற எதிர்கால மாட்சியும் கூறுதலறிக. |
IX. தோழி தேஎத்து நற்றாய் கூற்றுக்குச் செய்யுள் |
“செல்லிய முயலிற் பாஅய சிறகர் வாவ லுகுக்கு மாலையாம் புலம்பப் போகிய அவட்கோ நோவேன், தேமொழித் துணையிலள் கலுழு நெஞ்சின் இணையே ருண்கண் இவட்குநோ வதுவே” |
(ஐங்-378) |
X. கண்டோர் பாங்கில் நற்றாய் கூறுதற்கு எடுத்துக்காட்டுச் செய்யுள்: |
ஒருமக ளுடையேன் மன்னே; அவளும் செருமிகு மொய்ம்பிற கூர்வேற் காளையொடு பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்; இனியே, தாங்குநின் அவலமென்றிர்; அதுமற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே? உள்ளின் உள்ளம் வேமே, உண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமகள் ஆடிய மணியோ நொச்சியுந் தெற்றியுங் கண்டே” |
(நற்றிணை-184) |
இப்பாட்டில் ‘தாங்குமின் அவலமென்றிர், அதுமற்று யாங்ஙனம் ஓல்லுமோ அறிவுடையீரே என அறிவுடையோராகிய கண்டோர் பாங்கில் நற்றாய் பகர்ந்த கிளவி காண்க. |
XI. நற்றாய் தனிமையிற் கூறல்: |
“இதுவென் பாவை பாவை, இதுவென் னலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற் பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை காண்டொறுங் காண்டொªறுங் கலங்க நீங்கின ளொஎன் பூங்க ணோளே”. |
(ஐங்குறு-375) |
எனும் ஐங்குறு நூற்றுச் செய்யுள், மகட் பிரிந்த தாய் ஆற்றாமையால் வருந்தும் புலம்பு சுட்டிய கிளவியாகும். |