40. | ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் தாமே செல்லும் தாயரும் உளரே. | (40) |
|
ஆ. மொ. இல. |
There are mothers who go themselves to search of their daughters along the streets of fortified big cities and through the deserts. |
இளம்பூரணர் |
40. ஏமச்பேரூர்ச்...............உளரே. |
இது, தலைமகள் உடன்போகிய வழிச் செவிலிக்கு உரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) ஏமம்பேர் ஊர் சேரியும் - ஏமம் பொருந்திய பெரிய ஊரகத்துச் சேரியின் கண்ணும், சுரத்தும் - ஊரினின்றும் நீங்கிய சுரத்தின் கண்ணும், தாமே செல்லும் தாயரும் உளர் தாமே செல்லும் தாயரும் உளர். |
|
“தாமே செல்லுந் தாயர்” என்பதனால் செவிலி என்பது பெற்றோரும்; ‘தாயரும்’ என்றதனால் கைத்தாயர் பலர் என்று கொள்ளப்படும். அவ்வழிச் சேரியோரை வினாதலும், சுரத்திற் கண்டோரை வினாதலும் உளவாம். சேரியிற் பிரிதலும் பாலை யாகுமோ எனின், அது வருகின்ற சூத்திரத்தினால் விளங்கும். (ஈற்றேகாரம் அசை) |
|
சேரியோரை வினாஅயதற்குச் செய்யுள் |
“இதுஎன் பாவைக் கினியநன் பாவை இதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி இதுவென் பூவைக் கினியசொற் பூவையென்று அலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல் காண்தொறுங் காண்தொறுங் கலங்கி நீங்கின ளோவென் பூங்க ணோளே.” |
(ஐங்குற் 375 பி-ம்) |
எனவரும். |
சுரத்திடை வினாஅயதற்கு செய்யுள் |
“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல் |