எனும் திணைமாலை வெண்பாவில் பாலைநிலத்தும், வந்து மயங்குதல் காண்க. |
இதுபோலவே மற்றைய ஐந்திணையிலடங்கா உரிப்பொருள் அனைத்தும் எல்லாநிலத்தும் மயங்குமென்றறிக. (13) |
சிவலிங்கனார் |
இச்சூத்திரத்துக்கு, உரிப்பொருளில்லாக்கருப் பொருளும் பொழுதாகிய முதற்பொருளும் மயங்குதலும் உண்டு என இளம்பூரணர் கூறும் உரையே பொருந்தும். திணைமயக்குறுதலும் கடிநிலையின்று எனப் பொதுவில் திணைமயங்கும் என்றவர் திணையறிதற் குரிய பொருள்களுள் நிலம் என்ற முதற் பொருள் மயங்காது என்றார். ‘திணைமயக்குறுதலும்’ என்னும் சூத்திரத்தின்மூலம் பொழுதாகிய முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளுமாகியன மயங்குமா என்னும் ஐயம் தோன்றும் அதனை விலக்க இச்சூத்திரத்தால் உரிப்பொருள் மயங்காது; அல்லன மயங்கும் என்றார். எந்நிலமருங்கிற் பூவும் புள்ளும்’ (21) என்னும் சூத்திரத்தால் கருப்பொருள் மயங்குமாறு எப்படி என்பது சொல்லப்பட்டதேயன்றி மயங்கும் என்பது சொல்லப்படவில்லை. இச்சூத்திரத்தால்தான் சொல்லப்பட்டது. |
நச்சினார்க்கினியர் கைக்கிளைபெருந்திணைகள் மயங்கும் என்பது சொல்லப்பட்டதாகக் கொள்வர். அவற்றுக்கு முதல் கரு என்பன வரையறுக்கப்படவில்லையாதலின் மயக்கத்துக்கு இடம் இல்லை. |
பாரதியார், கொண்டுதலைக்கழிதலும் பிரிந்தவண் இரங்கலும் (18) கலந்த பொழுதும் காட்சியும் (19) தமக்கென உரிப்பொருளுடையனவல்ல ஆதலின் அவற்றையே மயங்கும் என்றார் ஆசிரியர் என்பர். அவை பாலை நெய்தல் குறிஞ்சி ஆகியவற்றில் சார்ந்து தமக்கெனவுரிப் பொருள் உடையனவாம். அதனால் உரிப்பொருளல்லன என்றல் பொருந்தாது. உரிப்பொருளில்லாச் செய்யுள் இல்லை. |