பக்கம் எண் :

282தொல்காப்பியம் - உரைவளம்

உம்மை  எண்ணும்மை,  தாய  ரெனப்  பன்மை  கூறித்தாமேயெனப்   பிரித்ததனாற்  சேரிக்கு நற்றாய்
சேறலுஞ், சுரத்திற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்ததென்றுணர்க.
  

உதாரணம்:
  

“வெம்மலை யருஞ்சுர நம்மிவ ணொழிய
விருநில முயிய்ரக்கு மின்னாக் கான
நெருநற் போகிய பெருமடத் தகுவி
யைதக லல்குற்றழையணிக் கூட்டுங்
கூழை நொச்சிக் கீழ தென்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலுங் காணிரோ கண்ணுடையீரே.” 
  

(அகம்-275)
 

வண்டலைக்  காணார்  தேஎத்து  நின்று  காணில்  ஆற்றீரெனக்  கூறினமையின்  ஆயத்தினையகன்று
இற்புறஞ் சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று.
  

“நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
விலங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார்
நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோநங் காதலோரே.” 
  

(குறுந்-130)
 

இது     செவிலி  தேடத்  துணிந்தது.  இக்குறுந்தொகையுள்    நம்மாற்    காதலிக்கப்பட்டாரென்றது.
அவ்விருவரையும்   தாயரு   முள   ரென்றதனாற்   றந்தையும்      தன்னையரும்   வந்தால்  இன்னது
செய்வலென்றலும் உளவென்று கொள்க.
  

“நுமர்வரி னோர்ம்பி னல்ல தமர்வரின்
முந்நீர் மண்டிய முழுவது மாற்றாது”
  

என்றாற்  போல்வன  அடி  புறத்திடாதாள்  புறம்  போதலும் பிரிவென்றற்கு சேரியுங் கூறினார்; அஃது
ஏம இல் இருக்கை யன்றாதலின்.                                                       (37)
  

சூத்திரம்:
  

பாரதியார்
  

40. ஏமப்போரூர்.................உளரே
  

கருத்து:-  இது,  தலைவி உடன்போன வழி அவள் தாய்மார் அவளைத் தேடிச் செல்லுதலும் உண்டென
உரைக்கின்றது.