இனி, செவிலி தேடிச் செல்லுதற்குச் செய்யுள்: |
“காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே.” |
(குறுந் 44) |
பாலைக்கலியில், “எறித்தரு கதிர்தாங்கி” எனும் பாட்டில். |
“வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை என் மகள் ஒருத்தியும் பிறண் மகன் ஒருவனும், தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்; அன்னார் இருவரைக் காணீரோ பெரும” எனுமடிகள் சுரஞ்சென்ற செவிலியின் கூற்றாம். |
41. | அயலோ ராயினும் அகற்சி மேற்றே | (41) |
|
ஆ. மொ. இல. |
Even if they are in a place very near, it is to be considered as separation. |
இளம்பூரணர் |
41. அயலோர்...............................மேற்றே. |
இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) அயலோராயினும் - (சேரியினும் சுரத்தினும் பிரிதலன்றித்) தமது மனையயற்கண் பிரிந்தாராயினும், அகற்சி மேற்றே - பிரிவின் கண்ணதே. |
எனவே, ஓர் ஊரகத்து மனையயற்கண்ணும் பரத்தையிற் பிரிவு பாலையாம் என்பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். (41) |
நச்சினார்க்கினியர் |
41. அயலோர்........................மேற்றே |
இதுவும் பாலைக்கு ஓர் வேறுபாடு கூறுகின்றது. |
(இ-ள்) அயலோர் ஆயினும் - முற்கூறிய சேரியினுஞ் |