பக்கம் எண் :

286தொல்காப்பியம் - உரைவளம்

இனி,     இதற்கு இன்னும் ஒரு பொருள்   கூறுவாருமுளர். அது வருமாறு: அயலோராயினும் - உடன்
போய  தலைமக்கள்  சுரம்  போகாமல்   ஊரகத்தே  மனை அயலில் தங்குவாராயினும் அகற்சி மேற்று -
அதுவும் பிரிவின் கண்ணதேயாம்.
  

இவ்வுரையும் இச்சூத்திரத்திற்குப் பொருந்தாது
  

மனையயல்  உறைதல் உடன்போதலா மாறில்லை. உடன்போய  தலைமக்கள் மனையயல் உறைந்ததாகப்
புலனெறி வழக்கில் யாண்டும் ஆன்றோர். செய்யுளிலாட்சியுமில்லை;    ‘தாமே செல்லும் தாயரும்’ என்னும்
முன்  சூத்திரத்  தொடரொடு  அடுத்தியையும்  அயலோராயின்   எனும் சொற்றொடர் அவ்வாறு செல்லுந்
தாயரல்லாப்   பிறரையே   சுட்டுவது   வெளிப்படை.மேலும்,     ‘அகற்சி’  என்பது  நெடுந்தூரத்தையே
குறிக்குமாகலின், மனை அயலைக் குறியாது. ‘அகற்சி’யை நீங்குதல்    எனப்பொருள் கொண்டு, பிரிவெனும்
பாலைத்;  திணையை இச்சூத்திரம் கூறுவதாக உரையாசிரியர் கொண்டனர்    முன், அவர் கொண்டுதலைக்
கழிதலைப்  பாலைத்திணையாகக்  கொண்டது பற்றி இச்சூத்திரத்திற்கும்    இவ்வாறு உரை கூறுவாராயினர்
உடன்போகும்  தலைமக்கள்  தம்முட் பிரிதலின்மையின், அவரொழுக்கம்    பாலையாதலில்லை. அதனால்
ஈண்டு  ‘அகற்சி’ என்பது பிரிதலை உணர்த்தாது சேய்மையையே    உணர்த்துமென்க. தலைவிதமர் தேடிச்
சுரஞ்செல்லுதற்குச் செய்யுள் வருமாறு:- ‘அன்றையனையவாகி’   என்னும்   நற்றிணை 48 ஆம் செய்யுளில்
நீர்எமரிடை  உறுதர  ஒளித்த  காடே”  என  வருவதும்,    நற்றிணை 362 ஆம் செய்யுளில், ‘நுமர்வரின்
மறைகுவென்மா அயோளே’ என்பதும் சேண்சென்றுதமர் தேடுதலைக்குறிக்கும்.                  (37)
  

சிவலிங்கனார்
  

இச்சூத்திரமே உடன்போக்கில் தாயரின் செயல் கூறுகின்றது.
  

(இ-ள்)  மனையகத்துத்  தலைவியைக்  காணாத  தாயர்தம்  மனை  அயலில் உள்ள மனையிடங்களிற்
சென்று தேடினார் ஆயினும் அதுவும் பிரிவின் மேலதேயாகும் என்றவாறு.