பக்கம் எண் :

288தொல்காப்பியம் - உரைவளம்

42.  

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும் நீக்கலின்
வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்ம்மையும்
கண்டோற்
1 சுட்டி  தாய்நிலை நோக்கித் தலைப்
பெயர்த்துக் கொளினும் நோய்மிகப் பெருகி தன்
நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களையென
பொழிந்தது
2 கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்
தொடு என்றிவை யெல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன
(42)
 

ஆ. மொ. இல.
  

The  expressions  of  the  maid-attendant  (Tholi)  who  is  very  dear   and rear to the
lady-love,  will take place when she explains the grave state of affairs which may happen
to  the  lover  and  the  beloved  if  he  fails  to take her with him when she sends her
Companion  with  him  when  consoling  the  lady-love  and  advising the lover, when she
expresses  her sorrow for separating her from her mothers, when she prevents the mother
of lady-love from pursuing them explaining the moral of the great who are well - versed in
scriptures  which  illustrate  what  is  truth and what is falsegood, and when consoling the
mother  saying  that  the lady-love eloped with her lover because of intense love towards
him.
  

தொல் சூ.39-ல் இலக்கண சூத்திரத்தில் குறிப்பாகக் காண்க.
  

இளம்பூரணர்
  

42. தலைவரும் விழும நிலையெடுத்..........................மேன.
  

இது பிரிவின்கண்1 தோழிக்குக் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று.
  


1. கண்டோர்ச் - பாடம் 

2. களைஇய வொழிந்தது - பாடம்