8 

viii
  

ஏழு     திணைகளுள் கைக்கிளையும்  பெருந்திணையும்  அகத்திணைக்குரிய கூறுகள் இல்லாமையினால்
புறத்திணை    சார்ந்தன    எனல்தகும்.     அதனை     உறுதிப்படுத்தும்    வகையில்    புறப்பொருள்
வெண்பாமாலையில்   கூறிய  பன்னிரண்டு  புறத்  திணைகளுள்  கைக்கிளையும்  பெருந்திணையும்  இடம்
பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது (58).
  

அன்பின் ஐந்திணை
  

அன்பின்     ஐநதிணை  என்பது  முல்லை,  குறிஞ்சி,  பாலை, மருதம், நெய்தல் என்பன அவ்வன்பின்
ஐந்திணை   நிலத்தின்   அடிப்படையில்  பாகுபடும்.   அந்த   வகையில்,   முல்லையைக்   காட்டோடும்,
குறிஞ்சியை     மலையோடும்,      மருதத்தை      நாட்டோடும்,     நெய்தலைக்     கடற்கரையோடும்
ஒப்புமைப்படுத்தலாம். பாலையான நடுவண் ஐந்திணைக்கு நிலம் கிடையாது  (2).
  

பாலையின் நிலத்தைக் குறிப்பிடுகையில்,
  

முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்

  

என்று சிலப்பதிகாரம் (11.64-66) குறிப்பிடுகின்றது.
  

பாடல்களின் கூறுகள்
  

பண்டைச்   செய்யுட்களை  நோக்குகையில்  முதற்பொருளும்  கருப்பொருளும் உரிப்பொருளும் பயின்று
வருகின்றன.  பாடலில்   மூன்று   பொருட்களும்  பயின்று   வருகையில்   முதற்பொருளைக்   கொண்டும்
கருப்பொருளும் உரிப்பொருளும் பயின்று வருகையில் கருப்பொருளைக்   கொண்டும், உரிப்பொருள் மட்டும்
வருகையில் உரிப்பொருளைக் கொண்டும் திணையை அறிய முடிகின்றது (3).
  

முதற்பொருள்
  

உலகத்தின்  இயல்பும்   செய்யுளின்  இயல்பும்  உணர்ந்தவர்  முதற்பொருளை  நிலம், பொழுது என்று
இரண்டு கூறுகளாகப் பகுக்கின்றனர். (4, 19).